---Advertisement---

கல்யாண விஷயத்தில் பிரேம்ஜி கொடுத்த டுவிஸ்டு…சர்வே எடுக்க ஆரம்பித்த நெட்டிசன்கள்?…

Published on: May 31, 2024
gemini prem balu
---Advertisement---

நேற்று வரை முரட்டு சிங்கிளாக இருந்தவர் பிரேம்ஜி அமரன். திடீரென அவருக்கு திருமணம் நடக்கப்போகிறது என வலைதளம் சொல்லியது. திருமணம் முடிக்கவிருக்கும் இருவரின் பெயர் அச்சிடப்பட்ட அழைப்பிதல் வைரல் ஆகிவருகிறது.

 

அதே நேரத்தில் “ஐயா” படத்தில் கருப்பசாமியாக நடித்த பிரகாஷ் ராஜ் இறந்தது போல நடித்து, தனது இரங்கலுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என பார்க்கும் காட்சியைப்போல இந்த அழைப்பிதல் விஷயம் அமைந்துவிடக்கூடாது என நெட்டிசன்கள் பேசத்துவங்கியுள்ளனர்.

பட ப்ரமோக்காக இப்படி செய்துவிட்டார் என சொல்லி முடித்துவிடவும் கூடாது, காரணம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அது கருத்தப்படவில்லை என்பதால்.

monica balu mahendra
monica balu mahendra

எப்படியோ பிரேம்ஜிக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதுவே அவரது ரசிகர்களின் நீண்ட நாள் பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 44வயதை கடந்துள்ள இவரது திருமண அறிவிப்பு செய்தி வந்த பிறகு இதே போல வயது கடந்து திருமணம் முடித்த கோலிவுட் பிரபலங்களை பற்றிய சர்வே வெளிவந்துள்ளது.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் இரண்டு திருமணம் முடித்திருந்தவர் தனது 77வது வயதில் 36வயதான ஜூலின் ஆன்றோவுடன் வாழ்ந்தார். இயக்குனர் பாலுமகேந்திரா 59வயதில் மோனிகாவை திருமணம் முடித்திருந்தார். இது இவரின் மூன்றாவது திருமணம். இயக்குனர் வேலு பிரபாகரன் தன்னுடைய 60வது வயதில் 30வயதான ஷெர்லி தாஸை மணமுடித்தார்.

இவர்களை போலவே “தில்”  பட வில்லனான ஆஷிஷ் வித்யார்த்தி ரூபாலிபருவாவை திருமணம் முடித்தார். இவரின் இரண்டாவது திருமணம் நடந்த போது இவருக்கு வயது 58. பிரேம் திருமணம் என சொன்னதுமே இந்த சர்வே வந்துள்ள நிலையில் அடுத்து இன்னும் முரட்டு சிங்கிள்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற லிஸ்டை வெளிவிட்டு விடுவார்கள் போலயே என கிண்டலாக சொல்லத்துவங்கியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!