தமிழகத்தின் அதிக இடங்களில் இப்போதைய பேச்சு “இந்தியன் – 2” படத்தை பற்றியே தான். படம் துவங்கியதிலிருந்து பல போராட்டங்களை சந்தித்தே வந்தது. ஷூட்டிங் ஆரம்பித்த நேரத்தில் விபத்து, அதன் பிறகு இடை, இடையே நடந்த பிரச்சனைகளை எல்லாவற்றையும் எதிர் கொண்டே வந்தது.
வர்ம கலையை மையமாக கொண்டு வெளிவர உள்ள “இந்தியன் – 2″ல் தன்னைக் கேட்காமல் தனது வர்ம முத்திரையை பயன்படுத்தி விட்டார்கள் என நீதிமன்றத்தை நாடியிருந்தார் வர்ம கலை ஆசான் ராஜேந்திரன்.
இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளை எல்லாம் தாண்டி நாளை ரிலீஸ் ஆக உள்ளது படம். “இந்தியன்” படத்தின் முதல் பாகம் மக்களின் மூளை ஆழமாக பதிந்து விட்டதால், இதன் இரண்டாவது பாகத்ததின் மீதான வரவேற்பு குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் சொல்லியிருக்கிறார்.
படத்தில் கமல் அதிகமான கெட்-டப்கள் போட்டிருக்கிறார் என்பதாலும், “இந்தியன் – 3″ம் பாகத்தின் முன்னோட்டமாகவே இரண்டாம் பாகம் இருக்கப்போகிறது என சொல்லப்பட்டதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த வண்ணமே இருந்து வருகிறது.

படத்தின் முக்கியமான அம்சமான தகவல்களில் ஒன்றினைப் பற்றி பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் படங்கள் மட்டுமே இதுவரை ஆறு விதமான ஃபார்மட்களில் வெளியிடப் பட்டு வருகிறதாம். அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளதாம் “இந்தியன் – 2”. ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஆறு ஃபார்மட் ரிலீஸ் என்ற இடத்தை பிடிக்கப்போகும் படம் என்ற பெருமையை “இந்தியன் – 2”. பெற உள்ளது. எது எப்படியோ நாளை இதே நேரம் “இந்தியன் – 2″வின் மூலம் தாத்தா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் துவங்கியிருப்பார்.








