---Advertisement---

பைக் பரிசாக கொடுத்து பச்சை கொடி காட்டிய ஷாலினி!…தல இனி வோல்டு ஃபுல்லா டூர் அடிச்சிடுவாரே?…

Published on: May 1, 2024
ajith shalini
---Advertisement---

மே 1 என்றால் எப்படி உழைப்பாளர்கள் தினம் நினைவுக்கு வருமோ, அதே போலே தான் அஜீத்குமாரின் பிறந்த நாள் நினைவுக்கு வந்துவிடும் அவரின் ரசிகர்களுக்கு.  திருவிழாதான் இந்த நாள் அவர்களுக்கு. வலைதளத்தை அதிர விடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலன் சார்ந்த நல்ல காரியங்களை அவரது பிறந்த தினத்தன்று செய்து மகிழ்வடைவார்கள் அஜீத் ரசிகர்கள்.

தனியாளாக சிகரம் தொட்டவராக பார்க்கப்படுபவர் அஜீத். ஆயிரம் தோல்விகளை பார்த்தவன் நான் என அவரே பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவில் அவரின் வாழ்க்கை முழுவதும் மேடு,பள்ளங்கள் தான்.

“அமர்க்களம்” படத்தில் ஜோடியாக நடித்த ஷாலினியின் மீது காதல் உண்டாக அதனை வெளிப்படுத்தி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்து அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகளுக்கு தந்தையானார் அஜீத்.

தங்களது காதல் வாழ்வு 25ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக இவர்கள் இருவரும் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை  வலைதளத்தில் ஷாலினி பதிவிட்டு, அஜீத் ரசிகர்களின் அன்பினை பெற்றார்கள் இருவரும்.

ajith
ajith

இப்படி இன்றும் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அஜீத் – ஷாலினி தம்பதியர் பல நேரங்களில் காதல் பற்றி பேசப்படும் பொழுது உதாரணமாக சொல்லப்படுகிறார்கள். மே 1ம் தேதியான இன்று பிறந்த நாள் கொண்டாடும் தனது காதல் கணவராகிய அஜீத்குமாருக்கு ‘டுகாட்டி’ பைக் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளாராம் ஷாலினி.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நட்பே துணை...நாங்க இனிமே ஃப்ரண்ட்ஸ்!...முஸ்தபா...முஸ்தபா பாடப்போகும் ரஜினி, சத்யராஜ்?...

ஏற்கனவே அஜீத் பிறந்த தின கொண்டாட்டங்களை கலைகட்ட வைத்து வரும் ரசிகர்கள் ஷாலினி வழங்கிய அன்பு பரிசு குறித்த செய்தியை கேட்டபிறகு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்களாம்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!

Editorial visual featuring the premiere and advance booking updates for 418.

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!