---Advertisement---

ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படம்

Published on: March 2, 2021
---Advertisement---

நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்து சமீபத்தில் வந்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடிதளத்தில் வெளிவந்து வரவேற்பு பெற்றது. இரண்டு வருடங்களுக்கு முன் ஆர்.ஜே பாலாஜி இயக்கிய எல்கேஜி படமும் வெற்றி பெற்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் திரையுலகில் வெளியான ‘பாதாய் ஹோ’ என்கிற காமெடி படத்தை ஆர்.ஜே பாலாஜி ரீமேக்கி இயக்க உள்ளாராம்.

இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு… ’வீட்ல விசேஷங்க’ என்று டைட்டில் வைக்க பாலாஜி திட்டமிட்டுள்ளார்.  இதற்காக இயக்குனர் பாக்யராஜிடம் அவர் அனுமதி கேட்க உள்ளாராம். ஏனென்றால் வீட்ல விசேஷங்க என்ற படம் பாக்யராஜ் இயக்கத்தில் வந்த சூப்பர் ஹிட் படமாகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.