---Advertisement---

இரையை கொத்தி தூக்கியதா கருடன்?…சூப்பராமே சூரி!…கருடன் திரை விமர்சனம்….

Published on: May 31, 2024
garudan
---Advertisement---

சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ளது “கருடன்”. சசிக்குமார், சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ஷிவிதா நாயர், பிரிகிடா, உன்னி முகுந்தன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது “கருடன்”. வெற்றிமாறானின் கதை படமாக இயக்கப்பட்டுள்ளது.

soori
soori

இணைபிரியா நண்பர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன். இதில் உன்னி முகுந்தனின் வலது கரமான ‘சொக்கன்’ கதாப்பாத்திரத்தில் சூரி. காவல் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, அவரின் ஆதரவால் அமைச்சராகும் அரசியல்வாதி கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்.  அரசியல்வாதியாக ஆர்.வி.உதயக்குமார்.

கோவில் டிரஸ்ட் வசம் இருக்கும் இடத்தை கைப்பற்ற என்னவெல்லாம் செய்கிறார். அதில் வெற்றி பெறுகிறாரா? அல்லது தோற்கிறா?.

garudan soori
garudan soori

இது நண்பர்களுக்கிடையே என்ன பாதிப்பை தருகிறது. வாழ வழியின்றி வரும் சொக்கன் சூரியை அரவணைக்கிறார் உன்னிமுகுந்தன். தனக்கு ஆதரவளித்த உன்னி முகுந்தன் மீதான விஸ்வாசத்தை சூரி எப்படி காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை.

துரை செந்தில் குமார் இயக்கியுள்ள விதம் பாராட்டை பெறுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக பின்னனி இசை காட்சிகளுக்கு வலு சேர்கிறது.

சூரி “விடுதலை” படத்தில் நாயகனாக மாறியிருந்தார். அதே சூடு குறையாத விதமே  “கருடன்” படத்தில் நடிப்பில் கலக்கியிருக்கிறார்.

நட்பு, விஸ்வாசம் இதற்கிடையே நடிக்கும் போராட்டமே படம். கலகலப்பான முதல் பாதி, விறுவிறுபான இரண்டாம் பாதி இப்படி திரையில் கச்சிதமாக வட்டமிடிக்கிறார் “கருடன்”.

படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் யாருமே எதிர்பார்த்திராத திருப்பங்கள். சூரிக்கு சபாஷ் போட்டு சூப்பர் என சொல்ல வைத்துள்ளது “கருடன்”. மொத்தத்தில் காத்திருந்து வெற்றி என்ற தனது இரையை கச்சிதமாக வேட்டை ஆடியுள்ளார் “கருடன்”. வெள்ளித்திரை வானில் அதிக நாள் வட்டமடிப்பார் “கருடன்”.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'காதல் தேசம்' திரைப்படத்தின் 30 ஆண்டு நிறைவுச் சிறப்புச் செய்தி.

காதல் மற்றும் நட்பின் காவியம் ‘காதல் தேசம்’: வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு – ஏ.ஆர். ரஹ்மானின் மாயாஜால இசையில் உருவான படத்தின் சுவாரஸ்யங்கள்!

Director Samuthirakani talking about the making of the movie Nadodigal.

‘நாடோடிகள்’ பட வாய்ப்பை முதலில் நிராகரித்த பிரபலங்கள்: இயக்குநர் சமுத்திரகனி பகிர்ந்த சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் தகவல்கள்!

News graphic featuring a potential box office clash between Dhanush and Rajinikanth.

தனுஷ் vs ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் மோதல்!: ஒரே வாரம் வெளியாகும் ‘ஓம்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ – கோலிவுட்டில் வெடிக்கும் சூப்பர் ஸ்டார் சண்டை!

TVK President Thalapathy Vijay regarding upcoming election updates.

விஜய்யிடம் சீட் கேட்ட பிரபல சினிமா தயாரிப்பாளர்: தளபதி சொன்ன அதிரடி பதில் – தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் பரபரப்பு தகவல்!

Late veteran actress Sowcar Janaki.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்த மூத்த நடிகையின் மறைவால் திரையுலகம் அதிர்ச்சி!

Actor Kamal Haasan traveling in economy class.

உண்மையான லெஜண்ட்! ஆடம்பரத்தைத் தவிர்த்து எகானமி கிளாஸில் பயணம் செய்த கமல்ஹாசன்: திரையுலகிற்கு முன்னோடியாக மாறிய உலகநாயகன்!