---Advertisement---

ரீ ரிலீஸில் சாதித்து கல்லா கட்டும் படங்கள்- இந்த ட்ரெண்டிங் நல்லா இருக்கு

Published on: August 29, 2025
---Advertisement---

கடந்த 1991ல் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகி இரண்டாவது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல மாநகரங்களில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

 

padayappa

 

சில வருடங்களாக முக்கிய நடிகர்களின் படங்களில் கதைக்கருவில் டீப் டெப்த் எனப்படும் ஆழ்ந்த நுணுக்கங்கள் எதுவும் இல்லாமல் சும்மா பில்டப் கொடுத்து ஏமாற்றப்படும் அளவிலேதான் உள்ளது.

 

படம் வெளிவரும் முன் பத்திரிக்கைகளில் ஆஹா, ஓஹோ என வரும் அப்டேட்டுகள் படம் வந்த பிறகு பொசுக்கென்று போய் விடுகின்றன.

எப்போதுமே சினிமாக்கள் மக்களுக்கு இனிமையை கொடுத்திருக்கின்றன, மனசே சரியில்லனானும் நூறு ரூபாய் போனா போயிட்டு போகுது என தியேட்டருக்கு சென்று படத்தில் உட்கார்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கே அதைவிட சோதித்தால் என்ன செய்வது, முன்னாடிலாம் படம் நல்லா இல்லன்னா பாட்டாவது நல்லா இருக்கும் அதுவும் இப்போ நல்லா இல்ல, ஆனால் எது எது நல்லா இல்லையோ அது எல்லாம் 2கே கிட்ஸ் பெரும்பாலானோருக்கு பிடித்திருக்கிறது, ஆனால் அதை தாண்டி 30 ல் இருந்து 90 வயது வரை சினிமா பார்வையாளர்கள் இருப்பார்கள் அல்லவா, பெண்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களை இயக்குனர்களோ நடிகர்களோ யோசிப்பதே இல்லை. இப்படித்தான் எடுப்பேன் இதை பார்த்தே ஆகணும் என எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் 2 நாளிலேயே வெற்றிவிழா, ஆயிரம் கோடி வசூல் என்று அள்ளிவிடுவதால் புதிய படங்களுக்கு மதிப்பில்லை.

 

இதனால் புது ட்ரெண்டாக ரன், உயிருள்ளவரை உஷா, படையப்பா இது போல படங்கள் விரைவில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இவை ஏற்கனவே யூடியூப், டிவி போன்றவற்றில் திரும்ப திரும்ப பார்த்திருந்தாலும் தியேட்டரிலும் திரும்ப திரும்ப பார்க்கவே செய்கிறார்கள், ஆதலால் இது புது ட்ரெண்டாக இருந்தாலும் நல்லா இருக்கு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.