---Advertisement---

பணம் எல்லாம் வேண்டாம் ரஜினி. ஸ்ரீதருக்கு சம்மதம் தெரிவித்த சூப்பர் ஸ்டார்…

Published on: May 8, 2024
rajini
---Advertisement---

கருப்பு வெள்ளை நிறத்தில் படங்கள்  வந்த காலங்களிலேயே தமிழ் சினிமாவில் கலக்கியவர் இயக்குனர் ஸ்ரீதர். எம்.ஜி. ஆர், சிவாஜி, முத்துராமன் போன்ற முன்னனிகளை வைத்த வெற்றி படங்களை கொடுத்தவர். “ரிக்ஷாக்காரன்”,  “உரிமைக்குரல்”  போன்ற வெற்றி படங்கள் எம்.ஜி.ஆருக்கு. “உத்தமபுத்திரன்”  மாதிரியான வெற்றிகளை சிவாஜிக்கும் வழங்கியவர் இவர்.

காலத்தால் அழியாத காவியமான “காதலிக்க நேரமில்லை” என்ற பிரம்மாணட வெற்றி படத்தினை தமிழ் சினிமாவில் படைத்த படைப்பாளி இவர். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மனதில் நிற்க தான் செய்கிறது.

நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தார் ஸ்ரீதர். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சதா சர்வ காலமும் சினிமாவை பற்றியே பேசிக்கொண்டிருப்பாராம். அவரை சந்திக்க வரும் நபர்களிடம் கூட படங்கள் பற்றியே பேசி வந்திருக்கிறார்.

sridar
sridar

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இவர்கள இருவரையும் வைத்து இவர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது சக்கை போடு போட்டது வெளியான நேரத்தில். 1978ம் வருடம் இந்த படம் வெளிவந்தது. இதன் பிறகு ரஜினிக்கு ஸ்ரீதர் மீதிருந்த மரியாதையும், அன்பும் அதிகரித்ததாம்.

மரியாதை நிமித்தமாக ஸ்ரீதரை சந்தித்த ரஜினிகாந்த் சென்றிருக்கிறார். அப்பொழுது பண உதவி ஏதும் வேண்டுமா என ரஜினி கேட்க அதற்கு ஸ்ரீதரோ பண உதவி எல்லாம் வேண்டாம் என்னிடம் அது இருக்கிறது அதற்கு பதிலாக எனக்கு ஒரு படம் பண்ணி தர முடியுமா? என கேட்டிருக்கிறார்.

அவர் கேட்ட மறுநிமிடமே ரஜினி சம்மதித்தும் விட்டாராம். அவர் உறுதி கொடுத்ததன் அடிப்படையில் வாய்ப்பு  அருணாச்சலம் படத்தில் இணை தயாரிப்பாளராக வழங்கப்பட்டதாம். இந்த தகவல்களை ஸ்ரீதரின் மகன் சஞ்சய் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!