1986 நவம்பர் 1 அன்று வெளியாகிறது புன்னகை மன்னன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி சுதர்சன், ஸ்ரீவித்யா, மற்றும் பலரானோர் நடித்திருந்தனர்.
பாலச்சந்தர் இயக்கிய ஏக் துஜே கேலியே மற்றும் மரோசரித்ரா படங்களின், தொடர்ச்சியாக, அதேபோல கதைக்களம் உள்ள ஒரு படத்தை பாலச்சந்தர் இயக்க விரும்பினார் அதனால் அதன் பாணியிலேயே ஒரு கதையை தயார் செய்து புன்னகை மன்னன் படத்தை 1986 தீபாவளி அன்று தயாரித்து இயக்கி வெளியிட்டு இருக்கிறார்.
படத்தில் இரண்டு கமல்ஹாசன்களை வித்தியாசமாக அடையாளப்படுத்தி இருந்தார் இயக்குனர். இன்னொரு கமல்ஹாசன் ஆக வரும் சாப்ளின் செல்லப்பாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஒரு காட்சியில் சாப்ளின் செல்லப்பா சின்ன குழந்தையின் அழுகையை நிறுத்த குள்ளமாக திடீரென மாறுவார், ஒரு நிமிடம் வரும் அந்த கதாபாத்திரம்தான் பின் நாட்களில் அபூர்வ சகோதரர்கள் படத்தை, கமல்ஹாசன் செய்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது.. மூடுபனி திரைப்பட காலத்திலேயே ஏஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவிடம், சின்ன சின்ன இசைக் கருவிகள் வாசித்தவர் என்றாலும் இந்தப் படத்தில், இசைஞானியின் இசை உதவியாளராக அவரின் பங்களிப்பு அதிகம் இருந்தது.
சிங்களத்து சின்ன குயிலே, மாமாவுக்கு குடுமா குடுமா, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்,என்ன சத்தம் இந்த நேரம், அனைத்து பாடல்களும் சிறப்பாக இருந்தது. மற்றும் படத்தில் இரண்டு தீம் இசைகளும் இடம் பெற்றது. அதுவும் இன்றுவரை ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. இசைஞானி கலக்கி இருந்தார்.
இப்படத்தின் ஓப்பனிங்கே கிளைமாக்ஸ் போல்தான் இருந்தது. முதல் காட்சியில் கமல்ஹாசனும் ரேகாவும் மரணிக்க போகும் அந்த இடம் கேரளாவில் உள்ள சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவியில் படமாக்கப்பட்டது









