---Advertisement---

ஒரே வார்த்தை தான் சொன்னார் விஜயகாந்த்!…ஓ.கே.சொன்ன ஜோதிகா உதவியாளர்…

Published on: June 12, 2024
vijayakanth jyothika
---Advertisement---

 

விஜயகாந்த் பற்றிய தனது நினைவுகள் சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். கேப்டனுடன் அதிகமாக நெருங்கி பழகும் வாய்ப்பினை பெற்றவர் இவர். விஜயகாந்தால் ஆதாயப்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கல் தமிழ் சினிமாவில் என்பது வரை தெரிந்து வைத்திருக்கக்கூடியவர் இவர்.

ஜோதிகா நடித்து வந்த படத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தினை நினைவு கூர்ந்திருக்கிறார் மாணிக்கம்.

படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்,  பட ரீலீஸ் செய்ய வேண்டியிருந்த வேலைகள் எல்லாம் வேகமாக நடத்தப்பட்டு வந்ததாம். அப்போது ஜோதிகாவிற்கு மட்டும் சம்பளத்தில் பாக்கி கொடுக்கப்பட வேண்டியது இருந்ததாம்.

manickam
manickam

ஜோதிகாவின் செகரட்ரியாக இருந்தது தங்கத்துரை என்பவராம். இவர் தான் சூர்யாவின் சினிமா பணிகளையும் கவனித்து வந்தாராம்.

ஜோதிகாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய 6 லட்சம் ரூபாயை கொடுக்க தயாரிப்பாளர் மாணிக்கத்திடம் இல்லாமல் இருந்ததாம். வேறு ஒரு படத்திற்கு கோடி ரூபாய் வரை கொடுத்திருந்ததால் தன்னிடம் பணமில்லாதை பற்றி ஜோதிகாவிடம் சொல்லப்பட்டதாம்.

பணம் வந்த பிறகு ஜோதிகாவின் உதவியாளரை அழைத்து தொகைக்கான செக்கினை கொடுத்தாராம் மாணிக்கம். அதனை வாங்க யோசித்த தங்கத்துரை பணமாக கொடுங்கள் என கேட்டாராம்.

அப்போது பக்கத்தில் இருந்த விஜயகாந்த் அது மாணிக்கம் நாராயாணன் கொடுத்துள்ள செக். அது ரிசர்வ் பேங்க் பணம் மாதிரி அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என சொல்லியதோடு அந்த செக்கிற்கு நான் கேரண்டி என சொன்னாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அஜீத் பெயரை பறிக்க துடிக்கும் சூர்யா?... சம்மதம் சொல்லி பப்ளிசிட்டி கொடுத்த விஜய்!...

விஜயகாந்த் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து வாயடைத்து போனாரம் மாணிக்கம் நாராயணன். அதோடு மட்டுமல்லாமல் நான் கேரண்டி என சொன்னது தனக்கு கிடைத்தை உச்ச பட்ச மரியாதை எனவும் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?