---Advertisement---

இதெல்லாம் இளையராஜா கிட்ட எதிர்பார்க்க முடியுமா?…ரஜினி படத்துக்கு பட்டுன்னு ஓகே சொன்ன தயாரிப்பாளர்!…

Published on: May 7, 2024
rajini ilayaraja
---Advertisement---

ரஜினிகாந்த்-சன் பிக்சர்ஸ்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராக போகும் படம் கூலி.  இந்த படத்தினுடைய ‘டைட்டில் டீஸர்’ சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இப்படி இருக்கையில், தன்னிடம் கேட்காமல் ‘டிஸ்கோ, டிஸ்கோ’ பாடலை படத்தில் பயன்படுத்தியது குறித்து கேள்வியெழுப்பி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம் இளையராஜா.

இந்த விஷயம் கோலிவுட் வாட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி சர்ச்சைகளை ஒரு புறம் கிளப்பியுள்ளது. இது விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. பிரபல இசயமைப்பாளர் ஒருவர் கூட இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த கேள்வியை தயாரிப்பாளர் மட்டும் தான் கேட்டு உரிமை கோர முடியும் என கருத்து சொல்லி இளையராஜவிற்கு எதிர் கேள்வியும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்ட தன் பின்னனி பற்றிய முக்கியமான தகவலை சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினார் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘கூலி’ என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ளலாமா? என கேட்டிருக்கின்றனர்.

koolie manickam narayanan
koolie manickam narayanan

ஒரு நொடி கூட யோசிக்காமல் மறுகணமே தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் நல்லது தானே, எனக்கு மகிழ்ச்சி தான் என பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் மாணிக்கம் நாராயணன். ரஜினி படத்திற்கு தனது பெயர் பயன்படுவது மகிழ்ச்சியை இன்னும் அதிகரித்துள்ளதாக பெருமித்துடன் சொல்லியிருந்தார்.

சரத்குமார், மீனா நடிப்பில் வெளிவந்த “கூலி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் ரஜினி படத்தினுடைய பெயரை வைப்பதற்கு முதலில் அவரிடம் சம்மதம் கேட்டிருக்கிறார்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!