---Advertisement---

மகுடிக்கு மசிந்த பாம்பு போல நின்ற மன்சூர் அலிகான்!…மரியாதைக்குரிய அந்த நபர் யார்?…

Published on: May 6, 2024
mansoor
---Advertisement---

“கேப்டன் பிரபாகரன்” படத்தில் கொடூர வில்லனாக வந்தவர் மன்சூர் அலிகான். வில்லானாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதாநாயகனானவும் வலம் வந்தார். தன் காட்டிற்கு தானே ராஜாவாக வாழ்ந்து வருபவர் இவர். மனதில் பட்ட கருத்துக்களை சட்டென பேசி விடுவார். இதனால் அடிக்கடி அவர் சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார். பிறகு அதற்கு அவரே விளக்கம் கொடுத்து பிரச்சனைக்கு முடிவை தேடியும் தருவார்.

யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாத குணத்தை கொண்டவராம் மன்சூர் அலிகான். “மறுமலர்ச்சி” படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததாம். தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவாளராம். சூட்டிங் வருவதற்காக மன்சூரை அழைத்த போது சிறிது நேரம் தாமதித்தும், நேரத்தை இழுத்து அடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்பொழுது அங்கிருந்தவர்களில் ஒருவர் ஒரு முக்கிய நபரிடம் மன்சூர் நடந்து கொண்ட விதத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். மறு நிமிடமே அந்த முக்கிய புள்ளி தொலைபேசி இணைப்பில் வந்து மன்சூர் அலிகானிடம் பேசியிருக்கிறாராம்.

அதற்கு முன் வந்தவர்கள் அத்தனை பேரையும் அசால்டாக டீல் பண்ணிய மன்சூர் அலிகான், அந்த குறிப்பிட்ட நபருடன்  ஃபோனில் பேசும் பொழுது மட்டும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினாராம். முடிவில் உடனடியாக சூட்டிங்கிற்கு புறப்பட்டு சென்று விட்டாராம்.

vijayakanth mansoor
vijayakanth mansoor

கைக்குள் அடங்காத கடல் அலையாக இருந்த மன்சூரலிகானை, உரிய முறையில் கச்சிதமாக பேசி காரியம் சாதித்த அந்த நபர் வேறு யாரும் கிடையாது மறைந்த “கேப்டன்”,  “புரட்சி கலைஞர்” விஜயகாந்த் தான். விஜயகாந்தின் மீது அதிக பயமும், அளவு கடந்த மரியாதையையும் கொண்டவராம் மன்சூர் அலிகான்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!

Stylish first-look poster of Ajith Kumar from his upcoming action film Dare Devil.

அஜித்தின் ‘டெர்டெவில்’ ஃபர்ஸ்ட் லுக்: நவம்பர் 2-ல் படப்பிடிப்பு தொடக்கம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!