---Advertisement---

நச்சுன்னு மேசேஜ் சொன்ன நாகேஷ்…அசந்து போய் ஷாக்கான இளவரசு!…

Published on: May 7, 2024
i8lavarasu nakaesh
---Advertisement---

“இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தினுடைய விழா ஒன்றில் பழம்பெரும் நடிகர்களான நாகேஷ், வீ.எஸ்.ராகவன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். வயதில் முதியவர்களே அவர்களிடம் எப்படி பேசுவது?, என்ன பேசுவது? என்று தெரியாமல் அங்கு இருந்த இளசுகளின் கூட்டம் நைசாக அவர்களிடமிருந்து ஜகா வாங்கி வெளியேறியதாம்.

அவர்கள் இருவரும் தனியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் ஏதாவது அவர்களிடம் பேச வேண்டும் என அவரிடம் சென்று பேசி இருக்கிறார் இளவரசு. அப்பொழுது நிகழ்காலத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால் பழைய விஷயங்களை  நினைத்து பார்க்க வேண்டும் என்று சொல்வார்களே அது உண்மையா? என நாகேஷிடம் கருத்து கேட்டு இருக்கிறார் இளவரசு.

ilavarasu
ilavarasu

உன் கையில் எத்தனை படங்கள் இருக்கிறது என இளவரசுவிடம் நாகேஷ் கேள்வி கேட்டிருக்கிறார் நாகேஷ். ஆஹா தேவையில்லாத ஒரு கேள்வியை கேட்டுவிட்டோமோ என நினைக்கவைத்ததாம் அவரின் அந்த கேள்வி.

இத்தனை படங்கள் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் இளவரசு. இன்னைக்கு எனக்கு வேலையே இல்ல, கையில் படங்களும் கிடையாது. நான் பழசை நினைச்சுக்கிட்டு “திருவிளையாடல்” தருமியாகவும், “தில்லானா மோகனாம்பாள்” வைத்தியாகவும், “சர்வர் சுந்தரம்” படத்தின் சுந்தராமாகவும் நினைத்து இருந்தால் நான் உன்னுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கேஎஸ்ரவிக்குமாரை அப்படியே காப்பி அடித்த அஜித்!...அதுக்காக நடைய கூடவா?....

அதனால் பழைய விஷயங்களை மறக்கப்பழகு. அப்போது தான் புதிய சிந்தனைகள் உருவாகும். அதுவே உன்னை மேம்படுத்தும் என இளவரசு கேட்ட கேள்விக்கான பதிலை அறிவுரை கலந்து  சொல்லியிருக்கிறார். இப்படி நாகேஷ் சொல்லுவார் என தான் எதிர்பார்க்கவேயில்லையாம். ஆனாலும் அவரின் அனுபவம் அந்த பதிலின் மூலம் தெரிந்ததாக சொல்லியிடுந்தார் இளவரசு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!