1984ம் ஆண்டு வெளியான ஒரு வித்யாசமான கதையமைப்பு கொண்ட படம், முடிவல்ல ஆரம்பம். இந்த படத்தை முகைதீன் என்பவர் இயக்கி இருந்தார், இவர் எல்லாம் தற்போது எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாது.

சமீபத்தில் மறைந்த ராஜேஸ், சில வருடங்கள் முன் மறைந்த ஜோதி இருவரும் நாயகன் , நாயகியாக நடித்திருந்தனர்.
ஒரு மலைக்கிராமத்தில் தேனீர் விடுதி நடத்தி வருபவரின் மகளாக ஜோதி இருக்க, லாரி ஓட்டுனரான ராஜேஸ் அடிக்கடி அங்கு வருகிறார், அவர் ஜோதியை காதலிக்க அவர்கள் உடல் ரீதியாகவும் இணைகிறார்கள், இதனால் அவர் கர்ப்பமாகிறார், இதனிடையே தொழிலுக்கு சென்ற ராஜேஸ் வராமல் காணாமலே போகிறார், இதனால் மகனை ஒரு தொண்டு நிறுவனத்தின் வாசலில் விட்டு விட்டு தனது ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்கிறார், தொண்டு நிறுவனத்தில் வளர்ந்த பையனை ஜான் என பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவராக வரும் சரத்பாபும் ஜோதியை காதலிக்கிறார், இந்த சூழ்நிலையில் காணாமல் போன தனது பழைய காதலர் ராஜேஸ் அந்த மருத்துவமனையில் கண் தெரியாதவராக வந்து சேர்கிறார், அவருக்கு கண் ஆபரேசன் செய்து பார்வை கொண்டு வர சரத்பாபு முயற்சிக்கிறார், இறுதியில் என்ன என்பதுதான் கதை.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தது, குறிப்பாக தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் பாடல் மிக நன்றாக இருந்தது.









