---Advertisement---

கேள்விக்குறியாக மாறிய லட்சுமி மேனனின் சினிமா வாழ்க்கை

Published on: August 30, 2025
---Advertisement---

தமிழில் சுந்தர பாண்டியன்,நான் சிகப்பு மனிதன், புலிக்குத்தி பாண்டி, கொம்பன் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். மிக அழகான காந்தமான முகம் கொண்ட இவர் மிக அமைதியான நடிகை என்றே பலரும் நினைத்தனர்.

 

சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து இவர் ஒரு முரட்டுத்தனமான நடிகை என அறிய முடிகிறது. தமிழில் அவ்வளவாக வாய்ப்பை பெறாத லட்சுமி மேனன் மது பழக்கம் பார்களுக்கு செல்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் தமிழில் வந்த பல வாய்ப்புகளை இழந்தார், இவருக்கு சரியான மேனேஜரோ இல்லை உதவி செய்யும் ஆட்களோ இல்லை என்பதால், இதுபோல நடவடிக்கைகளால் அவருக்கு தமிழில் மட்டுமல்லாது தமிழ் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களுமே இவருக்கு கைகூடி வரவில்லை.

 

இந்தச் சூழ்நிலையில் சமீபத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் ஒரு ஐடி ஊழியரை இவரது ஆட்கள் கடத்திச் சென்று மர்ம உறுப்பில் மிதித்து அடித்து துவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பத்திரிக்கையாளர் நடிகர்  பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

images 100

 

முன்பெல்லாம் பெண்கள் பாருக்கு செல்வது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்தது தெரியாமல் சென்று வந்தனர். இது கலியுகம்  இப்பொழுது ஓப்பனாகவே சென்று வருகின்றனர், லட்சுமி மேனன் இது போல குடிப்பபழக்கத்திற்கு அடிமையாகி, தன்னுடைய சினிமா வாழ்வை தொலைத்து விட்டார், அவருக்கு எடுத்துச் சொல்ல சரியான ஆட்கள் கிடையாது. சினிமா வாய்ப்புகள் பெற்றுத்தர சரியான ஆட்கள் கிடையாது, தமிழில் அமைதியான குடும்பப் பெண்ணாக அறிமுகமான லட்சுமிமேனன்  இதுபோல நிலைக்கு சென்று விட்டார் இப்போது போலீஸ் அவரை தேடும் நிலைக்கு ஆளாகி விட்டார் என பயில்வான் ரங்கநாதன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இவர் சுந்தரபாண்டியன் படம் லட்சுமி மேனன் போல் அல்லாது புலிக்குத்தி பாண்டி படத்தில் வந்த லட்சுமி மேனன் போல் அதிரடியாக மாறிவிட்டார் என்பதுதான் வருத்தமான தகவல்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.