---Advertisement---

நான் தனலட்சுமி ஆயிருப்பேன்!…எனக்கு தான ஓ போட்டு இருப்பாங்க?…காதலால் வாய்ப்பை இழந்த கிரண்…

Published on: May 7, 2024
kiran
---Advertisement---

“கில்லி”பட ரீ-ரிலிஸுக்கு பிறகு படத்தை பற்றி பல தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. வெளியான நேரத்தில் கூட இவ்வளவு பேச்சுக்கள் அடிபட்டு இருக்காது.  இப்பத்தான் ஃப்ரெஸ் ரிலீஸ் மாதிரி தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் “கில்லி”, “கில்லி” என எல்லார் காதிலிலும் இந்தப் படத்தைப் பற்றிய சப்தங்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சரண் இயக்கிய “ஜெமினி” படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கிரண். அந்த படத்தில் ‘கட்ட கட்ட நாட்டுக்கட்ட’ பாடல் கிரணுக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தந்தது.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் “அன்பே சிவம்”, அஜித்துடன் “வில்லன்” படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரசாந்துடன் “வின்னர்” படத்தில் நடித்திருந்தாலும் குறுகிய காலம் மட்டுமே இவர் தமிழ் சினிமாவில் பயணிக்க நேர்ந்தது.

thirumalai
thirumalai

விஜய் உடன் “திருமலை” படத்தில் ‘வாடியம்மா ஜக்கம்மா’பாடலில் மட்டும் தலை காட்டினார் வெகு நாட்களுக்குப் பிறகு. விஜய்க்கு  ஈடுகொடுத்து அந்த பாடலில் இவர் ஆடிய நடனம் இவரை பற்றி பேசவைத்தது. இதன் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்ப்புக்கள் கிளம்பியது. ஆனால் அவையெல்லாம் புஷ்வானமகிப்போனது.

முதலில் “கில்லி” படத்திற்கான வாய்ப்பு இவரை தேடி வந்ததாம். அந்த நேரத்தில் அவர் தீவிரமாக ஒருவரை காதலித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தின் மீது அதிகமாக அக்கறை செலுத்த முடியாமல் போய்விட்டதாம்.

அதனால் தான் தனக்கு வாய்ப்பு பரிபோனதாக கவலை தெரிவித்து இருந்தார் கிரண். அப்படி ஒரு வேலை கிரண் நடித்திருந்தால் தனலட்சுமியாக இவர் தான் வந்திருப்பார், ரசிகர்கள் எல்லாம் தியேட்டர் ஸ்கிரீன் முன் நின்று அவருக்குத்தான் ‘ஓ’ போட்டு இருப்பார்கள் என நினைக்க வைத்துவிட்டது கிரணின் குமுறல்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the Hollywood remake announcement of Vijay Sethupathi's Maharaja.

விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்: ஆஸ்கார் நாயகன் மேத்யூ மெக்கானகி நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!