எண்பதுகளில் பலரின் மனம் கவர்ந்த நடிகராய் வலம் வந்தவர் கமல்ஹாசன். இவரின் அழகிய முகம், ஸ்டைல், நடிப்பு திறமை ஆகியவற்றை வைத்து இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் அதிகம் . அதனால் இவரை வைத்து இயக்கப்படும் படங்களில் கண்டிப்பா ஒரு ரொமாண்டிக் டூயட் இடம்பெற்று விடும். சில படங்களில் உச்சபட்ச ரொமாண்டிக் டூயட்டாக கமலுக்கு என வைத்துவிடுவார்கள்.
ஏனென்றால், சகல கலா வல்லவன் படத்தில் வந்த நேத்து ராத்திரி யம்மா, நிலா காயுது பாடல்களுக்கு பிறகு கமல் படங்களில் இது போல ஓவர் ரொமாண்டிக் பாடல் ஒன்றை திணிக்கும் கட்டாயம் இருந்தது. அதற்கு முன்பே மூன்றாம் பிறையில் பொன்மேனி உருகுதே பாடல் இடம்பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதை ஒரு வெற்றி செண்டிமெண்டாக கருதி இயக்குனர்கள், கமலின் ஒவ்வொரு படத்திலும் இப்படி பாடலை வைக்க தொடங்கினார்கள்.
விக்ரம் படத்தில் இடம்பெற்ற மீண்டும் மீண்டும் வா பாடல் , நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால, அந்த ஒரு நிமிடம் படத்தில் இடம்பெற்ற அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு இது போல கவர்ச்சிகரம் நிறைந்த பாடல்கள் அவரின் பெரும்பாலான படங்களில் வைப்பது வழக்கமாயிருந்தது. இது அவரின் படங்களில் சில நாட்கள் தொடர்ந்தது.









