---Advertisement---

மொதல்ல பழைய தாத்தாவ பாருங்க 2கே கிட்ஸ்!…நாளைக்கு ரீ-ரிலீஸ் ஆகப்போகுதாமே இந்தியன் ஃபர்ஸ்ட் பார்ட்?…

Published on: June 6, 2024
indian
---Advertisement---

 

“இந்தியன் -2” படக்கதை இப்போதுள்ள 2கே கிட்ஸிற்கு ஏற்றது போல இருக்குமா? என விமர்சனங்கள் இப்போதே எழத்துவங்கிவிட்டது.ஒரு வேளை இது முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக இருந்துவிட்டால் படத்தை இந்த தலைமுறை எந்த விதத்தில் பார்க்கும் என விவாதமும் துவங்கி விட்டது.

“இந்தியன்” முதல் பாகத்தில் லஞ்சம், ஊழலை எதிர்த்து அதற்காக கொலை செய்யும் தாத்தாவாக நடித்திருந்தார் கமல்ஹாசன். நாட்டின் நலனுக்காக தனது மகனையே கொன்று விடுவார். அந்த அளவு தேச நலனில் அக்கறை கொண்டவராக நடித்திருந்தார் “இந்தியன்” முதல் பாகத்தில்.

indian shankar
indian shankar

“ஜெயிலர்” படத்தில் கூட ரஜினி தனது மகனை இழப்பார் நேர்மை தவறியதற்காக. இது இப்போதைய ரசிகர்களால் ஏற்கப்பட்டு விட்டது. படமும் மெஹா ஹிட் ஆனது. ஆனால் “இந்தியன்” படத்தின் கண்ணோட்டமே வேறு. லாஜிக்கிற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக பார்க்கப்பட்டவர்கள் அந்த கால ரசிகர்கள்.

ஆனால் ஆன்-லைனில் எதையும்  முடிக்கும் இன்றைய 2கே கிட்ஸ் தாத்தாவை எப்படி ரசிப்பார்கள் என்பதே இப்போதைய கேள்வி. இந்நிலையில் தான் “இந்தியன்” முதல் பாகம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அப்பா, மகன் என் இரண்டு வேடங்களில் வேற லெவல் நடிப்பை காட்டியிருந்தார் கமல் முதல் பாகத்தில். சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, நெடுமுடி வேணு  என பலரும் நடித்திருந்தனர் இதில்.

முதலல்ல பழைய தாத்தாவ பாருங்க, அப்புறம் லடஸ்ட் வெர்ஷனான ஆன்ட்ராயிட் தாத்தாவ பார்க்கலாம் என சொல்வது போல தான் இருக்கிறது நாளை “இந்தியன்” முதல் பாகம் ரீ-ரீலீஸ் என்ற அறிவிப்பு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

AGS Entertainment producer Archana Kalpathi clarifying rumors about actor Simbu and director Aswath Marimuthu movie status in a recent interview.

சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படம் டிராப் ஆகிடுச்சா… கிளம்பிய வதந்திகளுக்கு நேர்காணலில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!