---Advertisement---

டைட்டிலில் கதையை விளக்கி விடும் இளையராஜா

Published on: October 23, 2025
---Advertisement---

இப்போது வரும் படத்தில் எல்லாம் டைட்டில்கள் கிராபிக்ஸ் முறையில் வித்தியாசமாக போடப்படுகின்றன அப்படி இல்லை என்றால் சாதாரணமாக  ஒரு சின்ன பின்னணி இசையோடு டைட்டில்கள் போடப்படுகின்றன.

 

ஆனால் என்பது 90களில் வந்த பல படங்களில் இளையராஜா தனது சொந்த குரலில் பாடி தான் பல டைட்டில்கள் வெளியாகும். அதிலேயே படத்தின் கதையும் தெரிந்துவிடும். புது நெல்லு புது நாத்து படத்திலிருந்து பரணி பரணி பாடிவரும் தாமிரபரணி என்ற பாடலிலேயே இது நெல்லை மாவட்டம் சம்பந்தப்பட்ட கதை என தெரிந்துவிடும். இதுபோல கரிமேடு கருவாயன் மலையூர் மம்பட்டியான் போன்ற படங்களின் டைட்டில் பாடல்கள் அப்படத்தின் கதையைச் சொல்லிவிடும். இவர்கள் மிகப் புகழ் பெற்ற போராளிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள். இவர்களின் கதையை படத்தின் டைட்டில் கார்டில் இளையராஜா நாசுக்காக சொல்லி இருப்பார். சொல்லி இருப்பார். அந்தக் கதையை பாடல் வடிவில் அவரது சொந்த குரலில் பாடி இருப்பார். குறிப்பாக மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற காட்டு வழி போற புள்ள கவலைப்படாத, கரிமேட்டு கருவாயன் படத்தில் இடம் பெற்ற கதை கேளு கதை கேளு போன்ற பாடல்களை சொல்லலாம்.

 

மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில், இளையராஜாவின் குரலில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் ஆடிப் பாடுவது போல படத்தின் கதையை முழுவதுமே சொல்லி இருப்பார்கள். இப்படி இளையராஜா தனது குரலில் பல படங்களின் கதையை படத்தின் ஓபனிங் டைட்டிலேயே சொல்லி விளக்கி இருப்பார்.