---Advertisement---

தளபதியை தலைவனாக்க தயாராகி வரும் இயக்குனர்?…ஆடப்போகும் சதுரங்க வேட்டை இதுதானா!…

Published on: May 16, 2024
vijay
---Advertisement---

 

“கோட்” படம் கிட்டத்தட்ட வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பினை எதிர்நோக்கியுள்ளது. வெங்கட் பிரபு தனது இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் இருவரோடு சேர்த்து சிவகார்த்திக்கேயனையும் நடிக்க வைக்க போகிறார் என்ற விஷயம் லீக் ஆனது. இது உண்மையா?, பொய்யா? என்பது படம் திரைக்கும் வந்த பிறகே தெரியவரும்.

படம் பற்றிய அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக தனது கட்சி பெயரை அறிவித்து அசர வைத்தார். “கோட்” பட பாடலில் கூட மைக்க கையில் எடுக்கட்டுமா? என்ற வரிகள் வேறு அவரது ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்தது. சரி “கோட்” எப்படியும் வந்து விடும் சீக்கிரம் என்பது உறுதியாகிவிட்டது. “கில்லி” ரீ-ரிலீஸையே திக்குமுக்காடும் அளவில் கொண்டாடி தீர்த்தவர்கள் தளபதி ரசிகர்கள்.  அதனால் “கோட்”வெளியாகும் போது கோலாகலம் தான்.

vijay vinoth
vijay vinoth

இப்போது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ‘விஜய்69’ பற்றி தான். படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற குழப்பமும் நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது. இயக்குனர் இவர் தான் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டதாக கருதிக்கொள்ளும் விதமான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.

ஹச்.வினோத் தான் இயக்கபோகிறார், படத்தின் திரைக்கதை எழுதத்துவங்கி விட்டாராம் அவர். அதோடு மர்ம முடிச்சு ஒன்றினையும் இப்போதே அவிழ்த்து விட்டுள்ளார் அந்தணன். மக்கள் நலனுக்காக் பாடுபடும் தலைவனாக இதில் விஜயை நடிக்க வைக்க போகிறாராம் வினோத். இது தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வரும் நிலையில். இந்த கதை தான் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் பேசத்துவங்கியுள்ளார்களாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!

SS Rajamouli honoured at the Wall of Filmmakers in Institut Lumière, France.

உலகையே அதிரவைத்த ராஜமௌலி! ஸ்கோர்செஸி வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியர்.. பிரான்சில் நடந்தது என்ன?

Superstar Rajinikanth in the official announcement poster of Jailer 2.

இதுதான் அந்த மாஸ் அப்டேட்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. அக்டோபரில் அதிரப்போகும் தியேட்டர்கள்!

Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC.

ரத்தக் களறியாகும் ‘தேவதாஸ் – சந்திரா’ காதல்! லோகேஷ் கனகராஜின் அதிரடி என்ட்ரி.. ஜூலை 31-ல் ‘DC’ மெகா ரிலீஸ்!

Actor Shanmuga Pandian and director Thiru during the announcement of their new film.

மீண்டும் களமிறங்கும் ‘கேப்டன்’ பேனர்! இயக்குநர் திருவுடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்.. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பார்ட்-2வா இருக்குமோ? 

Chief Minister Vijay in the poster of his final film Jananayagan.

சென்சார் தடைகளைத் தகர்த்த ‘ஜனநாயகன்’! விஜய் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அந்த மாஸ் சர்ப்ரைஸ்.. ரிலீஸ் தேதி இதுதானா?