அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மௌனம் பேசியதே. இந்தபடத்தை அதற்கு முன்பு நந்தா படத்தை தயாரித்த அபராஜித் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சேர்ந்துதான் அபராஜித் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தனரொம்ப. இந்த தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் கணேஷ் ரகு. பாலாவிடம் உதவி இயக்குனராக அமீர் இருந்ததன் அடிப்படையில், இந்தப் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இயக்குனர் அமீர்குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் ரகு சமீபத்திய பேட்டியில் கூறி இருப்பது.
மௌனம் பேசியதே ஒரு வித்தியாசமான திரைப்படம். இந்த திரைப்படத்தின் பூஜை இன்விடேஷன் எடுத்துக்கொண்டு போய் பாலாவிடம் தான் கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள். அப்போது இயக்குனர் அமீருக்கும் பாலாவுக்கும் பிரச்சினைகள் இருந்து தான் இருவரும் பிரிந்து இருந்தனராம். இருந்தாலும் பாலா இந்த நிகழ்வை வெகுவாக பாராட்டினாராம். ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க என தயாரிப்பாளர்களை அவர் பாராட்டி இருக்கிறார்.
இயக்குனர் அமீர் பற்றி இவர் கூறியிருப்பது , இப்போ இருக்கிற பாய் எப்படி எனக்கு தெரியாது ஆனா அப்போ இருக்குற பாய் ரொம்ப நல்லவர்.இருந்தாலும் இப்போதும் பாய் ரொம்ப நல்லவராக அமைதியானவராக தான் இருக்கிறார். மௌனம் பேசியதே திரைப்படம் மிக அமைதியான படமாக இருந்தது. படம் மிகப்பெரிய அளவில் போகுமா என தெரியவில்லை. இருந்தாலும் அப்படம் ஓரளவு பேசப்பட்டது அமீரின் தொழில் பக்தி, இறை பக்தி, 5 வேளை தொழுவது பொய் சொல்லாதது போன்ற நல்ல குணங்களால் தான் எனக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் கணேஷ் ரகு.
பாலா அமீர் ஆகியோர் அடிக்கடி சண்டை பிடித்துக் கொண்டதாக சொல்லப்பட்டாலும் இருவரும் எப்பொழுதும் நல்ல நண்பர்கள் தான் அது ஒரு பெரிய சண்டையும் இல்லை இவர்கள் இங்கே சண்டை போட்டுக் கொண்டதாக தெரியும் ஆனால் அவர்களின் குடும்பத்தினர் அங்கே கொடைக்கானலில் சேர்ந்து டூர் சென்று இருப்பார்கள். இப்படித்தான் இவர்கள் சண்டை இருக்கும். அதனால் பாலாவும் சரி அமீரும் சரி மிக நல்ல மனிதர்கள் நல்ல அறிவு முதிர்ச்சி உள்ளவர்கள் என நந்தா மௌனம் பேசியதே படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு கூறியுள்ளார்.
அமீர் தயாரிப்பாளர் கணேஷ் ரகு மீது கொண்ட பிரியம் காரணமாக தனது இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.









