---Advertisement---

இந்தியாவின் முதல் 3டி படம் உருவான கதை

Published on: November 4, 2025
---Advertisement---

எத்தனையோ 3டி படங்கள் தற்போது வந்துகொண்டிருக்கிறது. 3டி படத்தை பார்க்க சென்றால் உள்ளே நுழையும்போது முப்பரிமாண கண்ணாடி என சொல்லக்கூடிய 3டி கண்ணாடி ஒன்றை கொடுப்பார்கள்.

அதை அணிந்து படம் பார்த்துவிட்டு வரும்போது கண்ணாடியை வாசலில் நின்று தியேட்டரில் பறித்துவிடுவார்கள். இப்படி 3டியில் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவம்.

 

My Dear Kuttichathan

 

இந்த 3டி படம் முதன் முதலில் இந்தியாவில் வெளிவந்தது, கேரளாவில் மலையாள மொழியில் அப்பச்சன் தான் இந்த முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை தயாரித்தவர்.

 

கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு என பலர் நடித்த இந்த படத்துக்கு இசையமைத்தவர் அப்போது தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்த இளையராஜாதான். செல்லகுழந்தைகளே, பூவாடைக்காற்று போன்ற பாடல்களும் பிரமாதமாக இருந்தன. படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

 

படத்தை இயக்கியவர் ஜிஜு பொன்னுஸ் என்ற இயக்குனர். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இப்படி சினிமாவின் உயர்தர டெக்னீசியன்கள் அனைவரும் இப்படத்தில் பணியாற்றி இருந்தனர்.

வெறும் 45 லட்சத்தில் படம் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி வசூலித்த திரைப்படம் இது. இந்த படத்தின் சில காட்சிகளை உல்டா செய்து மிக்ஸ் செய்து சந்தானம், பிரகாஷ்ராஜ் நடித்தது போல் கிரியேட் செய்யப்பட்டு தமிழில் இப்படம் 2ம் பாகம் போல் 2010ல் வந்தது. வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது.