---Advertisement---

விஜய் அண்ணா அவ்ளோ சொல்லியும் கேட்டீங்களா?…சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும் அசால்ட் பண்ணிய ரசிகர்!…

Published on: June 22, 2024
vijay
---Advertisement---

நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பர்த்-டே ஸ்பெஷலாக அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் “கோட்” படத்தினுடைய டீஸர் வெளியானது.

அதே போல ரசிகர்ளுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதாமாக படம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகும் என்ற செய்தியும் வந்து விட்டது.

இதே மாதிரித்தான் இன்று மாலை படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி விஜய் பிறந்த நாளில் அடுத்தடுத்த அப்-டேட்களால் அவரது ஃபேன்ஸ் திக்கு முக்காடிப்போய் இருக்கின்றனர். இதை விடவா ட்ரீட் கிடைத்து விடும்?என்ற சந்தோஷத்தோடு.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனது பிறந்த தினத்தை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை போட்டிருந்தார்.

vijay birthday
vijay birthday

தங்களது அபிமான தலைவர்கள் என்ன தான் அறிவுரைகள் சொன்னாலும் அதனை கேட்காமல் தங்களது இஷ்டத்திற்கு செய்வதை தான் ரசிகர்களில் சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

விஜய் அவ்வளவு சொல்லியும் சென்னை நீலாங்கரையில் விஜய் பிறந்த தினத்தை கொண்டாட கராத்தே சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓடுகளில் தீயிட்டு அதனை உடைக்கும் சாகசத்தில் மாணவர் ஒருவர் ஈடுபட்டார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தீ அந்த மாணவனின் உடலில் பற்றியது. அதே போல தீயை அணைக்க பாய்ந்து வந்த நபரின் மீதும் தீ பற்றிக்கொண்டது.

இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த இருவருக்கும் தேவையான மருத்துவ உதவுகள் செய்ய்யப்பட்டது. விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.

அதற்கு பதிலாக தங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்யுங்கள் என சொல்லியதை காது கொடுத்து கேட்காமல இந்த மாதிரியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததால் தான் இப்படி நடந்து விட்டது என பேச்சுகள வரத்துவங்கி விட்டது.

சாகசம் பண்ணும் போது இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் இதெல்லாம் சகஜம் தான். சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும் என வடிவேலு சொன்ன காமெடி டயலாக்கை நியாபகப்படுத்தும் விதமாக தீக்காயம் பட்ட மாணவர் கிருஸ்வா சொல்லியிருக்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் எதிர்பாராத விதமாக இது நடந்து விட்டது. சீக்கிரம் எழுந்து வருவேன் என கிருஸ்வா தன்நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.