---Advertisement---

பயங்கர தோல்வியை சந்தித்த சத்யராஜின் 100வது படம்

Published on: August 23, 2025
---Advertisement---

எல்லோருக்கும் 100வது படம் வெற்றியடையுமா என்றால் இல்லை விஜயகாந்த் போன்ற ஒரு சிலருக்கே மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா படம் கூட தோல்வியடைந்துள்ளது. பிரபு நடித்த ராஜகுமாரன், கமல் நடித்த ராஜபார்வை போன்ற அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பணத்தை நிரப்பி கொடுக்கவில்லை. கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் தான் 100வது படமாக மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

vinyl vathiyar veettu pillai

இயக்குனர் பி வாசு கூட்டணியில் வந்த வாத்தியார் வீட்டு பிள்ளையும் அவருக்கு தோல்விப்படமாக அமைந்தது.1989 அக்டோபர் தீபாவளிக்கு இப்படம் மாப்பிள்ளை, வெற்றிவிழா, தங்கமான ராசா உள்ளிட்ட படங்களுடன் வெளியாகி தோல்வியை சந்தித்தது.

பி வாசு பொதுவாக கன்னட, மலையாள, ஹிந்தி படங்களை ரீமேக் செய்ய தமிழுக்கேற்றவாறு அதை பட்டி டிங்கரிங் பார்த்துதான் எடுப்பார், இந்த படத்தில் எந்த பட்டி டிங்கரிங்கும் பார்க்கவில்லை போல , இந்த படமும் நம்மூர ராஜா என்ற கன்னட படத்தின் ரீமேக் தான், அந்த நேரத்தில் சத்யராஜ் நடித்த திராவிடன் படமும் ரிலீசானது அதனால் இப்படம் வணிக ரீதியாக பயங்கர தோல்வியடைந்தது.

ஊழல் நிறைந்த ஒரு நில உரிமையாளரின் கெமிக்கல் பேக்டரி கட்டும் திட்டத்தை கிராமத்து இளைஞர் சத்யராஜ் எவ்வாறு தடுத்து நிறுத்துகிறார் பின்புலத்தில் கொஞ்சம் காதல், செண்டிமெண்ட் என கலந்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இளையராஜாவின் இசையால் தான் இப்படம் இன்னும் மனதில் நிற்கிறது, தையர தையாரே, மணமாலையும்,, ஒரு பூஞ்சோலை ஆளானதே, சிக்குன்னு இழுக்குது சிட்டாஞ்சிணுக்கு என அனைத்து பாடல்களுமே நன்றாக இருந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.