---Advertisement---

முதல் படத்தில் வராததால் அடுத்த படத்தில் வந்த இளையராஜா பாடல்.

Published on: September 2, 2025
---Advertisement---

1982ம் ஆண்டு வி.சி குகநாதன் இயக்கத்தில் வர இருந்த படம் மணிப்பூர் மாமியார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இப்படம் வராமலே போனது.

 

படத்தில் விஜயகுமார் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றோர் நடிப்பதாக இருந்த சூழ்நிலையில் படம் பிலிமில் 9000 அடி எடுக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் ட்ராப் ஆனது.

 

முதல்வர் ஆன பிறகு ஜெயலலிதா நடித்தது நீங்க நல்லா இருக்கணும் என்ற படம். இந்த படத்தில் முதல்வராகவே இவர் நடித்திருந்தார், அதை நடிப்பு என்று சொல்லி விட முடியாது. சும்மா முதல்வராக சில காட்சிகளில் கோட்டையில் இருக்கும் அதே கெட் அப்பிலே வருவார்.

 

இவர் கடைசியாக நாயகியாக நடித்தது இந்த படம்தான். இப்படத்தில் ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே,ரசிகனே என் அருகில் வா, கூத்தாடி கூத்தாடி என பல பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இதில் முக்கியமாக சமையல் பாடமே என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இந்த படம் ரிலீசாகாத சூழ்நிலையில் கடந்த 1988ல் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி படத்தில் இப்பாடல் மீண்டும் இடம்பெற்றது.  அதே பாடலை கொஞ்சம் மாற்றம் செய்து மீண்டும் உன்னால் முடியும் தம்பி படத்தில் பயன்படுத்தப்பட்டது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.