இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கேரியர் முழுவதும் அவரது பெயரை சொல்ல வைக்கக்கூடிய படம் “ஜிகர்தண்டா”. 2014ம் ஆண்டு வெளிவந்தது இந்த படம். சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்க லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பாபி சிம்ஹாவிற்கு இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது. அதோடு மட்டுமல்லாமல் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. “ஜிகர்தண்டா” படத்தின் இரண்டாம் பாகமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. முதல் பாகத்தை போலவே இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் இந்த படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். விகிடன் சினிமா விருதுக்கு இந்த படம் நாமினேட் ஆகியிருந்தது.
இதில் 7 விருதுகளை “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பெற்றுள்ளது. சிறந்த இயக்குனர் விருது கார்த்திக் சுப்புராஜிற்கு வழங்கப்பட்டது. நிமிஷா சஜயன் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார்.

எஸ்.ஜே. சூர்யா சிறந்த என்டர்டெயினர் விருதையும், சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விகிடன் விருதுகளை பெற்றனர். சிறந்த மேக்-அப்பிற்கான விருது வினோத்திற்கும், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது ப்ரவின் ராஜாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கலை இயக்குனர் விருதினை சந்தானம் இதே படத்திற்காக பெற்றுக்கொண்டார்.
இப்படி |”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் 7 விருதுகளை பெற்றுள்ளது நேற்று நடந்த விகிடன் சினிமா விருது நிகழ்ச்சியில். தனது படத்திற்கு விருதுகளை வழங்கி கெளரவப்படுத்திய விகிடன் நிறுவனத்திற்கும், ஆதரவு தொடர்ந்து தந்து வரும் ரசிகர்களுக்கும் படக்குழுவின் சார்பாக தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக “ஜிகர்தண்டா” பட இயக்குனர் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








