பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக வியக்க வைத்தவர் இயக்குனர் சேரன். இதன்பின் அடுத்தடுத்து இவர் இயக்கிய பொற்காலம் வெற்றி கொடி கட்டு போன்ற படங்கள் இவரின் கதை சொல்லும் திறமையை நிரூபித்தன.
இவரின் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை பார்த்து பலரும் அதிசயத்தனர். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்த காலகட்டங்களில் அடிக்கடி கோபம் கொண்டு வெளியே வந்து விடுவாராம் திரும்பவும் சென்று சார் சேர்ந்து கொள்கிறேன் என சொல்வாராம், எனக்கு கொஞ்சம் ரோஷம் அதிகம். அதனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளில் அதனால் அங்கிருந்து வெளியே வந்து விடுவேன் திருப்பி வயிறு பசிக்கும்போது இயக்குனர் கே எ ஸ் ரவிக்குமாரிடம் சென்று சார் திரும்ப சேர்த்துக் கொள்ளுங்கள் என சொல்வேன்.ரோஷம் வருது உனக்கு என சொல்லி திட்டிக் கொண்டே திரும்பவும் சேர்த்துக் கொள்வார். எனக்கு அதிகம் உதவி செய்தது அவர்தான் எனக் கூறுகிறார்.
அதேபோல் மகாநதி படத்தில் சந்தான பாரதியுடன் அவர் உதவி இயக்குனராக பணிபுரித்தார் அந்தப் படத்திலும் கமலிடமும் சந்தான பாரதியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து வெளியே வந்தார்என சொல்லப்படுவதுண்டு, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதெல்லாம் அறியாமையில் செய்த ஒரு தவறு அவர்கள் கிரியேட்டர்கள் வித்தியாசமாக எதையாவது யோசிப்பார்கள், நமக்கு ஏன் அதை முதலிலேயே சொல்லவில்லை என உதவி இயக்குனர்களாகிய நமக்கு கோபம் வரும். ஒரு முறை மகாநதி படப்பிடிப்பில் ஜலதரங்கம் வேண்டும் என கேட்டுவிட்டார்கள். அதைத்தேடி பகல் முழுவதும் நானும் இன்னொரு உதவி இயக்குனாலும் அலைந்தோம், இறுதியில் மயிலாப்பூரில் இருந்த ஒருவரிடம் ஜலதரங்கத்தை பார்த்து கண்டுபிடித்து அவரையும் வண்டியில் ஏற்றி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வந்தோம் இப்படி அலைக்கழிப்பு செய்கிறார்களே முன்பே சொல்லி இருக்கலாமே எல்லாவற்றையும், என பல வித விஷயங்களில், கோபம் வந்தது.அதெல்லாம் அறியாமை என இப்போது புரிகிறது என இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.









