---Advertisement---

கிரிக்கெட்ல மட்டும் இல்ல கில்லர் மில்லர் கிடையாது…இதை இனி சினிமாவுக்கும் சொல்லாலாம்…உலக தரத்தில் தனுஷ்!…

Published on: June 11, 2024
danush
---Advertisement---

தனுஷின் “ராயன்” படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ரீலீஸ் தேதி கூட நேற்று வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தனுஷின் 50 வது படம். அதோடு மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரும் அவரே.

எப்போதும் போல தனுஷின் குரலில் பாடல் ஒன்றின் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி விட்டது. இதானால் படத்தின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்ற தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்தடைந்திருக்கிறது. கடந்து முடிந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது “கேப்டன் மில்லர்”.

தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், “ஜெயிலர்” பட வில்லன் விநாயகன், நாசர், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தனுஷின் இந்த “கேப்டன் மில்லர்” படம் 10வது லண்டன் தேசிய விருதிற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

captain miller
captain miller

ஏற்கனவே ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷின் படம் இப்போது லண்டன் விருதுக்கான பட்டியலிலும் சேர்ந்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று தான் இருந்திருக்கும் இந்நேரம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பருத்திவீரனும் பன்னிக்குட்டி ராமசாமியும்!...இவங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு ஒற்றுமையா?...

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் டேவிட் மில்லரை கில்லர் மில்லர் என ரைமிங்காக அழைப்பார்கள். இனி தமிழ் சினிமாவில் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தையும் அப்படி அழைத்து விடுவார்கள் போலவே தான் தெரிகிறது.

பரிந்துரைக்க பட்டிருக்கும் “கேப்டன் மில்லர்”  எப்படியாவது விருதினை பெற்று விட வேண்டும் என்பதுவும் இப்போது தனுஷ் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!