இயக்குனர் கங்கை அமரன் தனது படங்களில் வித்யாசமாய் ஏதாவது செய்வார். அதாவது அறிமுக காட்சியில் இருந்தே ஏதாவது வித்யாசமாய் செய்து அந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைப்பவர். இவர். இவர் இயக்கிய செண்பகமே செண்பகமே படத்தின் டைட்டிலை அந்த படத்தின் டெக்னீஷியன்கள் வீடியோவாக காண்பித்து அவர்களுடன் குறும்புத்தனம் செய்து வெளியிட்டிருப்பார்.
இதே பாணியை தனது கும்பக்கரை தங்கையா மற்றும் வில்லுப்பாட்டுக்காரன் படங்களிலும் பயன்படுத்தி இருப்பார் கங்கை அமரன். இந்த படங்கள் எல்லாம் பேசப்ப்பட்டது. இதே பாணியை தனது வில்லுபாட்டுக்காரனிலும் பயன்படுத்தினார், அதாவது கரகாட்டகாரன் நூறாவது நாள் விழாவில் யதார்த்தமாக வந்து போன பிரபலங்களை வைத்து படத்தின் டைட்டிலை போட்டிருந்தார் கங்கை அமரன்.
இப்படம் அதே கரகாட்டக்காரன் குரூப் கருமாரி கந்தசாமி மற்றும் துரை இருவரும் தயாரித்திருந்தனர். படம் பெரிய அளவில் போகவில்லை சுமார்தான். பாடல்களை இளையராஜா பிரமாதமாக போட்டு கொடுத்திருந்தார். கலைவாணியே ராணியே, சோலை மலை ஓரம் போன்ற பாடல்கள் நன்றாக இருந்தன. இப்படத்தின் கதையும் கிராமத்து கதைதான் ஆனால் சீரியஸ் காட்சிகள் அதிகம் இருந்ததும் , கொஞ்சம் தொய்வான திரைக்கதையும் இப்படத்தை பெரிய இடத்துக்கு எடுத்து செல்லவில்லை. 1992ல் இப்படம் வெளிவந்தது.

