விஜய் அம்மாவின் இயக்கம்- பாட்டு எல்லாமே தூள்

விஜய் அம்மாவின் இயக்கம்- பாட்டு எல்லாமே தூள்

நடிகர் விஜயின் அம்மா ஷோபா அந்த காலத்தில் இருந்து பல முக்கிய பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியவர். எம்.எஸ்.வி , இளையராஜா , தேவா என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய ஷோபா அவர்கள் அந்த காலத்தில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரை காதல் மணம் புரிந்தார்.

 

ஒரு காலத்தில் புரட்சி இயக்குனராய் இருந்த எஸ்.ஏ சந்திரசேகர் சொந்தமாக தயாரித்த படங்களில் எல்லாம் தனது மனைவியின் பெயரில் தான் தயாரிப்பார். இந்த இன்னிசை மழை திரைப்படத்தை மட்டும் தனது மகன் விஜய் பெயரில் ஜோசப் விஜய் என்ற பெயரில் தயாரித்திருந்தார், அதே சமயத்தில் இந்த படத்தின் இயக்குனர் ஷோபா என பெயர் போட்டுவிட்டார். ஷோபா இயக்கி இருந்தாலும் எஸ்.ஏ சந்திரசேகரின் தலையீடு இல்லாமல் இயக்கி இருக்க மாட்டார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் மிக பிரமாதமாய் போட்டு கொடுத்திருந்தார் இளையராஜா. ஒரு பாடல் கூட சோடை போகாத அளவு, மிக பிரமாதமான பாடல்களை கொடுத்திருந்தார் இளையராஜா. தூரி தூரி, தெற்கே பிறந்த கிளி, ஒரு ராகதேவதை, பச்சைக்கொடி நான் காட்டுவேன், அடி நேற்றிரவு, ஹலோ, மங்கை நீ மாங்கனி, வா வா கண்மணி, வா வா மன்னவா என அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தன. இது முற்றிலும் காதல் கதை என்பதால் எஸ்.ஏ சந்திரசேகர் சட்டத்தை அடிப்படையாக கொண்ட படங்களை மட்டுமே இயக்கியவர் என்பதால் அந்த முத்திரை தன் மீது போய்விடக்கூடாது என்பதற்காக திரைக்கதை மட்டும் இவர் எழுதி ஷோபாவை இயக்க சொன்னார் என சொல்லப்படுகிறது.