இன்று மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பற்றுக்கொண்ட ராமராஜன் நாமளும் இது மாதிரி ஹீரோ ஆயிடணும், சினிமாவில் நல்ல நிலையில் வரணும் என கடுமையாய் முயற்சி எடுத்ததன் விளைவு ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் கணேஷ் தியேட்டர் என்ற தியேட்டர் இன்றளவும் உள்ளது. அங்கே கோன் ஐஸ் ஃபேமஸ். தமிழ்நாட்டில் ஆயிரம் மல்டிப்ளேக்ஸ் கணேஷ் தியேட்டரை விட காஸ்ட்லி தியேட்டர் இருந்தாலும் அந்த கணேஷ் தியேட்டர்ல கொடுக்குற கோன் ஐஸ் ஃபேமஸ். படத்துக்கு வராதவர்களும் உள்ள வந்து கோன் ஐஸ் வாங்கிட்டு போவாங்க, அப்படிப்பட்ட புகழ்பெற்ற கணேஷ் தியேட்டரில்தான் ராமராஜன் ஆரம்ப காலத்தில் வேலை பார்த்தது.
பின்பு சென்னைக்கு வந்து காரைக்குடி நாராயணன், இராமநாராயணன் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி எண்ணற்ற படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.
நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனாலும் அதன் பின் வந்த எங்க ஊரு பாட்டுக்காரன் நன்றாக ஓட, கரகாட்டக்காரன் நிற்காமல் ஓட இவரின் வாழ்க்கை ஓட்டமும் நின்று பேச நேரமில்லாமல் ஓடும்படி மாறிவிட்டது.
கரகாட்டக்காரன், பார்த்தால் பசு,அன்புக்கட்டளை, ராஜா ராஜாதான், என்னை விட்டு போகாதே, ஊரு விட்டு ஊரு வந்து, வில்லுப்பாட்டுக்காரன் என இவரின் அந்த நாளைய படங்கள் எல்லாம் தூள் ரகம் தான்.