நடிகர் நிழல்கள் ரவி நடித்து கடந்த 1993ல் வெளிவந்த படம், மறுபடியும். பொதுவாக தனியாக புதிய கதைகளை மிக அமைதியாக உருவாக்க கூடியவர் பாலு மகேந்திரா.
ஆனால் இந்த படத்தை ஹிந்தியில் 1982ல் வெளியான ஆர்த் என்ற ஹிந்தி படத்தில் இருந்து எடுத்தாராம் பாலு மகேந்திரா. மகேஷ் பட் இயக்கிய படம் இது.

ஒரிஜினல் ஹிந்தி படமான ஆர்த் படத்தை நிழல்கள் ரவி ஹிந்தியில் ஒருமுறை தியேட்டரில் பார்த்துக்கொண்டு இருக்கும்போது நிழல்கள் ரவி நினைத்தாராம் , ஆஹா அருமையா இருக்கே இந்த படத்தை தமிழில் எடுத்து நம்மளை அழைத்தா எப்படி இருக்கும் என நினைத்தாராம், அவர் நினைத்தது போலவே சில வருடங்கள் கழித்து பாலு மகேந்திரா நிழல்கள் ரவியை அழைத்தாராம், ஈர்ப்பு விதி என ஒன்று உள்ளது, நாம் எதுவாக நினைக்கிறோமோ அதை மகிழ்ச்சியாக நடந்துவிட்டதாக நடப்பதாக மகிழ்ச்சியாக கற்பனை செய்தால் அது கண்டிப்பா நடக்கும் என ஒரு ஈர்ப்பு விதி சார்ந்த விசயங்கள் நம்பிக்கைகளாக சமூகத்தில் உலவுகிறது, அது நிழல்கள் ரவியின் இந்த விசயத்தில் நடந்தது ஆச்சரியம்தான்.
இயக்குனராக வரும் நிழல்கள் ரவி மனைவியை விட்டு வேறு பெண் பின்னால் அலையும் கதைதான். இதில் நிழல்கள் ரவி, ரேவதி, ரோகிணி என அனைவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இளையராஜா இசையில் பாடல்களும் நன்றாக இருந்தன.

