தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு காலத்தில் தமிழில் வந்த பழைய சரத்குமார் நடித்த கூலி, கமலஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களையும் தூர்தர்ஷனில் வந்த பல சீரியல்களையும் தயாரித்தவர்.
சமீபத்திய சினிமா நிகழ்வுகள் குறித்து ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் லோகேஷ் கனகராஜின் படங்களை எல்லாம் அவர் விமர்சித்துள்ளார்.அவர் விமர்சிப்பதும் சரியான முறையே. அவர் சொல்வது போல பல படங்கள் வன்முறையாக மட்டும் தான் வருகின்றன. எத்தனை படங்களில் குத்தி கொண்டிருப்பதை வெட்டிக் கொண்டிருப்பதையும் ரத்தம் வருவதையும் காண்பிப்பீர்கள் என லோகேஷ் கனகராஜிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார் .
இவர் சொல்வது உண்மை என்றாலும் ஆனால் இவரை விமர்சிப்பவர்கள் அதிகம் சோசியல் மீடியாக்களில் இவரின் பேட்டி பகுதிகளை சென்று பார்த்தால் தெரியும் குறிப்பாக அஜித் ரசிகர்கள் இவரை அதிகம் விமர்சிப்பார்கள் காரணம் என்னவென்று கேட்டால் அஜித் பற்றி இவர் ஒரு குற்றம் ஒன்று சொன்னதுதான்.அதாவது பல வருடங்கள் முன்பு இவரிடம் வாங்கிய பணத்தை அஜித் கொடுக்கவில்லை என்ற குற்றத்தை இவர் பலமுறை பல பேட்டிகளில் சொல்லியுள்ளார். அதனால் இவர் பேட்டியை பார்த்தாலே அஜித் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனுக்குள் புகுந்து விடுவார்கள்.
