கமர்சியலாக வெற்றி பெற்ற காத்திருந்த கண்கள்

கமர்சியலாக வெற்றி பெற்ற காத்திருந்த கண்கள்

அந்த காலங்களில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி படங்களுக்கென்று ஒரு தனி மவுசு இருந்தது அப்படியாக இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் புகழ்பெற்ற ஒரு திரைப்படம்தான் காத்திருந்த கண்கள் என்ற திரைப்படம்.

 

இது 1960ம் ஆண்டு வெளியான பெங்காலி திரைப்படமான ஸ்மிருதி துக்கு தக் என்ற படத்தின் ரீமேக் ஆகும். பிரகாஷ்ராவ் அந்தக்காலங்களில் தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனராவார்.  ஹிந்தி  படங்களையும் இயக்கியுள்ளார்.

 

இரட்டை சகோதரிகளாக சாவித்ரி இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். இரட்டை குழந்தைகள் சிறு வயதிலேயே சூழ்நிலை காரணமாக பிரியும் சூழ்நிலையில் வளர்ந்த பிறகு அவர்கள் படும் துயரங்களே கதை.

 

சாவித்ரி, ஜெமினி கணேசன்,எம்.ஆர் ராதா, பண்டரிபாய் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தது, புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆவர்.

 

படத்தில் இடம்பெற்ற வளர்ந்த கலை மறந்துவிட்டால், கோட்டையிலே ஒரு ஆலமரம், ஓடும் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே, காற்று வந்தால் தலை சாயும்  உள்ளிட்ட பாடல்கள் புகழ்பெற்றவை. மிக அருமையான கனத்த கதைக்களமுள்ள ஒரு படம்தான் இந்த காத்திருந்த கண்கள். 1982ம் ஆண்டு கமர்சியலாக ஓடி வெற்றி பெற்ற படம்தான் காத்திருந்த கண்கள்.