சொந்த ஊர் பரமக்குடியை விட்டுக்கொடுக்காத கமல்

சொந்த ஊர் பரமக்குடியை விட்டுக்கொடுக்காத கமல்

தமிழ் திரையுலகில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து சென்று இன்று உலகம் போற்றும் நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் பிறந்தது இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரண்மனையில்.பரமக்குடி சொந்த ஊர் அவ்வளவுதான். பரமக்குடியில் உள்ள ரவி திரையரங்கில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் உள்ளிட்ட சிறு வயதில் அடிக்கடி பார்த்தவர்.

பரமக்குடியில் ரிலீஸ் படங்கள் எப்போதும் வெளியாகாத நிலையில் கமலின் திரைப்படம் புதுப்படமாக 80களில் ரிலீஸ் ஆகுமாம்.

பெரும்பாலான நடிகர்கள்  தங்கள் ஊர் பெயரை மறந்து விடுவார்கள், ஊர் பெயரை சொல்ல மாட்டார்கள், சில இயக்குனர்கள் தாங்கள் வளர்ந்த பிறகு தாங்கள் இருக்கும் ஊர் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள், அந்த ஊர்களில் தனது சினிமா ஷூட்டிங்க்குக்கு ஒரு ஷாட் கூட வைக்க மாட்டார்கள்.

 

ஆனால் கமல்ஹாசன் தனது ஆரம்ப கால படங்களில் எல்லாம் தனது ஊர் பெயரை சொல்லி கொண்டே இருப்பார், 1986ல் வந்த விக்ரம் படத்தில் சலாமியா நாட்டில் அரசனுக்கு இன்னொரு மனைவியாய் வாழ்ந்து வரும் நபரிடம் நீங்க எந்த ஊர் என கேட்க, மனோரமா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரு என சொல்ல கமலஹாசன் நான் பரமக்குடி, நெருங்கி வந்துட்டிங்க என சொல்வார், அது போல் அந்த ஒரு நிமிடம் படத்தில் ஒருவர் நீங்க தமிழனா என கேட்க பச்சையான பரமக்குடி தமிழன் என சொல்வார். இப்படி சொந்த ஊரை விட்டுக்கொடுக்காமல் பேசி இருப்பார் கமல்.