மலையாளத்தில் மோகன்லால் தயாரித்து வெளிவந்த படம்தான் காலபாணி. இப்படத்தை மோகன் என்ற தயாரிப்பாளருடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பிரபு நடித்திருந்தார், இந்த படம்தான் தமிழில் சிறைச்சாலை என்ற பெயரில் வந்திருந்தது.
சுதந்திர காலத்தில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திர போராளிகள் பற்றிய கதை. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை வாங்கி வெளியிட்டு இருந்தார்.
இந்த கதையை எழுதியவர் தாமோதரன் என்பவர். மலையாளத்தில் காலபாணி என்றால் கருப்பு நீர் என்று அர்த்தம். கருப்பு நீர் என்றே தமிழில் வைத்திருக்கலாம் ஆனால் அது பொருத்தமா இருந்ததோ என்னவோ வைக்கவில்லை.
மோகன்லால், பிரபு, தபு, அம்ரீஷ்பூரி என பல்வேறு மாநில நடிகர்கள் நடித்த அப்போதைய பான் இந்தியா படம் இது. 100 கோடி, இருநூறு கோடி என படம் தயாரித்து அந்த படம் பெரிய அளவில் போகிறதா என்றால் தற்போது இல்லை. இந்த படம் மலையாளத்தில் அப்போதைய பட்ஜெட்டில் வெறும் 2.5 கோடியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட முதல் பெரும்பட்ஜெட் படம் இதுதானாம்.
அது போல டால்பி ஸ்டீரியோ ஒலித்தரத்தை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியது இந்த படம்தானாம். பிரியதர்சன் இயக்கத்தில் இளையராஜா பிரமாதமாக பாடல்களை கொடுத்திருந்தார். மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றிப்படம் தமிழில் சுமார் வெற்றிதான்.
				
 