80, 90களில் திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்ட பல பாடல்கள் படத்தின் நீளம் கருதி, அந்த படத்தில் சேர்க்கப்படாமல் போயிருக்கிறது. குறிப்பாக அமைதிப்படை படத்தில் விசித்ராவுடன் சத்யராஜ் ஆடும் கவர்ச்சிப்பாடலை எல்லாம் சேர்த்த இயக்குனர் மணிவண்ணன், சொல்லி விடு வெள்ளி நிலவே பாடலையும்,முத்துமணி தேரிருக்கு பாடலையோ சேர்க்கவில்லை.
அது போல் வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் தண்ணியில நனைஞ்சா அது தங்கமுனு ஜொலிக்கும் என்ற பாடலை உமாரமணன் பாடி இருந்தார், இது படத்தில் வரவில்லை கேசட்டில் மட்டும் வந்தது.
இதுபோல் நிழல்கள் படத்தில் வரும் தூரத்தில் நான் கண்ட உன் முகம், என் உயிர் தோழனில் வரும் மச்சி மன்னாரு போன்ற பல பாடல்கள் படத்தில் வரவே இல்லை.
இப்படியாக தமிழ் சினிமாவில் பல்வேறு அழகிய பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டனர் அப்படி பெரும்பாலும் சேர்க்காமல் விட்ட இயக்குனர் பாரதிராஜாவாகத்தான் பெரும்பாலும் இருக்கும். உண்மையில் இப்பாடல்களை சேர்க்காமல் வேறு பல பாடல்களை சேர்த்து அவற்றில் பல கவனம் பெறாமல் போனது வரலாறு. அதற்கு இந்த பாடல்களையே சேர்த்து இருக்கலாம்.

