கடந்த வாரம் இயக்குனர் சித்ரா லட்சுமணனுக்கு இயக்குனர் பாரதி கண்ணன் பேட்டி கொடுத்தாலும் கொடுத்தார் அவரின் வீடியோக்கள் தான் அதிகம் சோசியல் மீடியாவை சுற்றி வருகிறது.
ஆன்மீகத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ள இயக்குனர் பாரதி கண்ணனிடம் சித்ரா லட்சுமணன் ஒரு கேள்வி கேட்டார் அதாவது ஆன்மீகம் ஜோதிடம் கர்மா இது பற்றி நம்பிக்கை பற்றி பாரதி கண்ணனிடம் கேட்டதற்கு, நிச்சயமாக அதெல்லாம் உண்டு என சொன்னார்.
மேலும் கர்மா என்றால் என் தாத்தன் பாட்டன் செய்வதற்கு நான் எதற்கு கஷ்டப்பட வேண்டும் என ஒருவரிடம் நான் கேட்டேன், அதற்கு அவர் உன்னுடைய தாத்தாவின் சொத்துக்கள் எல்லாம் நீ அனுபவிக்கிறாய் தானே, அப்போ அந்த கஷ்டத்தையும் சேர்த்து தான் அனுபவிக்கனும் என தெளிவாக சொன்னார், இருப்பினும் அவரிடம் மன்னிப்பு கேட்டாராம். என்னுடைய அண்ணன் தம்பிகள் நான்கு பேர் ஆனால் எனக்கு மட்டும் அதிக சோதனைகள் வருகிறது ஏன் என கேட்டார், உங்கள் தாத்தா பெரியசாமி மறுபிறப்பாக கூட நீங்க இருக்கலாம் என அதற்கு அவர் பதில் சொன்னாராம். இப்படியாக கர்மாக்களை நாம் கழித்து தான் ஆக வேண்டும் என்ற வகையில் அவர் பதில் சொல்லி இருந்தார்.
