இசைஞானி பாடலை காப்பி அடித்த இட்லி கடை டீம்

இசைஞானி பாடலை காப்பி அடித்த இட்லி கடை டீம்

தமிழ் சினிமாவில் இசை அழிந்து பல வருடங்கள் ஆகிறது நல்ல பாடல்கள் என்பதே சுத்தமாக வருவதில்லை. அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் கம்போசிங் என்ற பெயரில் குத்துப் பாடல்களை  தான் படத்தில் பாடல் என போட்டு வருகின்றனர்.

 

மேலும் அனிருத் எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை இதுபோல, முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் பழைய பாடல்களை காப்பி அடித்து  அப்படியே போட்டு வருகின்றன சில படங்களில் இளையராஜாவோட பழைய பாடல்களை அப்படியே படத்தில் சேர்த்து படத்தின் வெற்றிக்கு  வழி வகுக்கின்றனர்.

சொந்த நடையில் யாருமே எதுவுமே செய்ய இயலாத சூழ்நிலையில் தான் தற்போது திரைப்பட உலகம் உள்ளது. நல்ல காமெடி இல்லை நல்ல பாடல் இல்லை நல்ல குடும்ப கதை இல்லை இப்படி பல்வேறு குறைகளை தமிழ் சினிமாவில் இப்போதுள்ள காலகட்டத்தில் சொல்லலாம்.

 

 முதலில் இருந்து கடைசி வரை எந்த காட்சியும் போர் அடிக்காமல் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படங்கள் தற்போது வருவதே இல்லை. எல்லாமே காப்பி என்று ஆகிவிட்ட சூழலில் சமீபத்தில் வந்த இட்லி கடை என்ற படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடுகிறார் அந்த பாடல் எஞ்சாமி தந்தானே எல்லாமே என்ஞ் சாமி தந்தானே என்ற ஒரு பாடல். இந்த பாடல் மனைவி ரெடி படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த சாண்பிள்ளை ஆனாலும் நான் ஆண் பிள்ளை தான்யா என்ற பாடலை காப்பி அடித்தது அப்பட்டமாக தெரிகிறது இதுபோல காப்பி எடுத்து தான் தமிழ் சினிமா தற்போது வாழ்ந்து வருகிறது.