காமெடி ஜோடிகளுக்கு  அழகான பாட்டு போட்ட இளையராஜா

காமெடி ஜோடிகளுக்கு அழகான பாட்டு போட்ட இளையராஜா

ஒரு மேடையில் இளையராஜாவிடம் பேசிய திரு ரஜினிகாந்த், சாமி மேல எனக்கு கோபம், நீங்க கமலஹாசனுக்கு மட்டும் நல்ல நல்ல டூயட் போட்டு இருக்கிங்க எனக்கு போட்டது இல்ல என்ற வகையில் பேசி இருந்தார்.

இதற்கு பதிலளித்த இசைஞானி இது தவறு நான் யாருக்கும் அப்படி எல்லாம் போட்டதில்லை, எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் பாட்டு போடுறேன், ஏன் உங்களுக்காக நான் எத்தனையோ நல்ல பாடல்களை போட்டிருக்கிறேன் என கூறினார்.

 

அவர் கூறியது போல இளையராஜா செய்த இசை ஜாலங்கள் ஏராளம், 80களில் ராமராஜன் போன்ற நடிகர்கள் எல்லாம் அவரது நடிப்பு திறமை ஒரு பக்கம் இருந்தாலும், இளையராஜாவின் பாடல்களே அவரை பெரிய அளவில் தூக்கிவிட்டது எனலாம், இப்படி புது நடிகர் பழைய நடிகர் என வேற்றுமை எதுவும் இல்லாமல் மிக சிறப்பாக இசை அமைத்தவர் இளையராஜா.

 

அதற்கு உதாரணம் இந்த பாடல், பெரும்பாலும் கங்கை அமரன் இயக்கி, இளையராஜா இசையமைத்த சின்னவர் படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள், அதில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா வகையறாக்களுக்கு ஒரு பாடல் ஒன்று போட்டிருப்பார் இளையராஜா, கடலோர கவிதையே என ஆரம்பிக்கும் அந்த பாடல், இளையராஜாவின் பல ஹிட் பாடல்களில் உள்ள வரிகளை சேர்த்து எழுதப்பட்ட அழகிய பாடல் ஆகும். இப்படி காமெடி ஜோடிக்கு கூட அழகிய பாடல்களை கொடுத்தவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை செம கலக்கலாக கொடுத்திருப்பார் இளையராஜா, ப்ரில்யூட், இண்டர்ல்யூட் என சொல்லக்கூடிய ஆரம்ப இசை, இடையிசை என எல்லாமே சூப்பராக இருக்கும். இப்படி இளையராஜா இசையமைத்த படங்களில் எல்லாம் நடிகருக்கு முக்கியத்துவம் இல்லாமல் சூழ்நிலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.