மறக்க முடியாத கதாசிரியர் சித்ராலயா கோபு

மறக்க முடியாத கதாசிரியர் சித்ராலயா கோபு

1960களில் இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களுக்கு கதை வசனம் திரைக்கதை முதலிய பணிகளை மேற்கொண்டவர் திரைக்கதை ஆசிரியர் கோபு. இவர் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர் இவரின் திறமையை பார்த்து இவருக்கு கதை திரைக்கதை வசனம் போன்றவற்றை எழுதும் திறமையை பார்த்து, இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடன் சேர்த்துக்கொண்டார், அங்கே என்ன கொடுப்பாங்க என்னிடம் வா உனக்கு நல்ல சம்பளம் தருகிறேன் என தன்னுடைய படங்களில் இவரை பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் ஸ்ரீதர்.

 

 

கோபுவும் ஸ்ரீதரின் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் போன்றவற்றை எழுதி முக்கிய பங்காற்றி இருக்கிறார் அப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்று இருக்கிறார்.

 

ஸ்ரீதரின் கல்யாண பரிசு தொட்டு, அவரின் எல்லா படங்களுக்கும் வசனம் எழுதி இருக்கிறார் முக்கியமாக 80 க ளில் வந்த தென்றலே என்னை தொடு படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் கோபுவின் வசனங்களில் வந்த படமாகும்.

கோபு எண்பதுகளுக்கு  பிறகு சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.இவரின் திறமையை பார்த்து ஏ.வி.எம் நிறுவனம் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது மோகன் மாதுரி நடித்த வசந்தி என்ற திரைப்படம் தான் அது.

 

மேலும் கங்கை அமரன் இசையில் பாண்டியராஜன் நடிப்பில்டில்லி பாபு என்ற படத்தையும் இயக்கி  இருக்கிறார் நகைச்சுவை சம்பந்தமான விஷயங்கள் தான் இவருக்கு அதிகம் வரும் அதனால் இவர் நகைச்சுவை சம்பந்தமான படங்களுக்கே அதிக வசனம் எழுதி இருக்கிறார்.

 

90களில் சத்யராஜ் நடிப்பில் வந்த ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பான உலகம் பிறந்தது எனக்காக படத்திலும் இவர் வசனம் எழுதியுள்ளார். இது இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கிய திரைப்படம். வழக்கமாக ஸ்ரீதர் படம் மட்டுமல்லாது இது போல ஒரு சில படங்களில் வேறு இயக்குனருக்காகவும் கோபு பணியாற்றியுள்ளார்.

 

தற்போது 90 வயதுக்கு மேலாகும் கோபு, வயோதிகத்தால் படம் இயக்கவோ கதை வசனம் எழுதவோ இல்லாமல் இருக்கிறாரே தவிர மிகச்சிறந்த திறமையாளர் ஆவார்.