மிக அழகான இளைஞனாக நாம் அமராவதியில் பார்த்த அஜீத் இன்று உச்ச நடிகர் . கோடானு கோடி ரசிகர்களை கொண்ட மிகப்பெரிய நடிகர். எந்தவித ஆள் பலமும் இன்றி தனியாளாக சுயம்புவாக வந்து சினிமாவில் ஜெயித்தவர் அஜீத்.
விஜய் அறிமுகமான பிறகுதான் இவர் அறிமுகமானார். அதனால் அந்த காலக்கட்டத்து நடிகராக அடுத்தடுத்து அறிமுகமான நடிகர்களாக இருந்ததால் ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய், அஜீத் என்ற நிலை உருவானது.
அமராவதி படத்தை தயாரித்த சோழா கிரியேசன்ஸ், இவர்கள் இதற்கு முன்பு செல்வா இயக்கத்தில் தலைவாசல் படத்தை எடுத்திருந்தனர். அதே செல்வாவை இயக்குனராக போட்டு புதியவர் அஜீத்குமாரை நாயகராக போட்டு படத்தை எடுத்தனர். தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தை பார்த்துவிட்டுதான் எஸ்.பி.பி சிபாரிசில் அஜீத் இந்த படத்தில் நடித்ததாக கூறப்பட்டது. அந்த பிரேம புஸ்தகம் என்ற படம் அஜீத் நன்கு வளர்ந்த பிறகு காதல் புத்தகம் என வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ரிலீசாகி போனது.1992ல் இப்படத்தில் நடிக்க கையெழுத்திட்டு நடித்த அஜீத், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்தபோது பைக் ரேஸில் கலந்து கொண்டு காயத்துடன் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அப்பவே அஜீத் அப்படித்தான் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படத்தில் நடித்தபோது சங்கவிக்கு வெறும் 16 வயதுதான், இப்படத்தில் அடக்க ஒடுக்கமாக வரும் சங்கவி போக போக கவர்ச்சியாக நடித்து முன்னணி நாயகியாக மாறினார்.

