கார்த்திக் கால்ஷீட் விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார் என அனைவருக்கும் தெரியும். கார்த்திக் என்று எழுதினாலே யாராவது கமெண்ட்ல வந்து கார்த்திக் கால்ஷீட் விவகாரத்தில் சொதப்புபவர் என சொல்லிடுவாங்க.
கார்த்திக் பல தயாரிப்பாளர்களிடம் படம் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டுவிட்டு ஷூட்டிங் வராமல் குழப்பம் செய்வதில் வல்லவர். இதை இயக்குனர் பாரதிகண்ணன் கூட தனது பேட்டியில் சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார், ஒரு படத்துக்காக பணத்தை கொடுத்துவிட்டு வாங்க முடியாமல் தான் பட்ட அனுபவத்தை கூறி இருந்தார். இப்போது அந்த பணத்தை வாங்க தான் முயற்சி எடுத்ததையும் எப்படியெல்லாம் கார்த்திக் நடந்து கொண்டார் எனவும், அவரை மாதிரியே மிமிக்ரி பேசிக்காட்டி நடித்துக்காட்டி சித்ரா லட்சுமணன் அவர்களின் சேனலில் பேட்டியளித்துள்ளார்.
விஜயகாந்த் தலைமையில் நடந்த பஞ்சாயத்துக்கு ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் உட்பட 7 பேர் சென்று இருந்தார்களாம். அதில் பாரதிகண்ணன் உட்பட நபர்களும் இருந்திருக்கிறார்கள். பஞ்சாயத்துக்கு அப்படி இப்படி டைமை இழுத்து, 3 மணிக்கு தான் வந்தாராம், வந்தவர் உங்களுக்கு பணம் தானே செட்டில் பண்ணனும் இருங்க என சொல்லிவிட்டு ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து கையெழுத்து போட்டு, உங்களுக்கு ஜனவரி , பிப்ரவரி, உங்களுக்கு மார்ச், ஏப்ரல் என மாதங்களை பிரித்துகொடுத்தாராம், அதாவது நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறார், இதை பார்த்து காஜா மைதீன் டென்சன் ஆகிவிட்டாராம், விஜயகாந்தோ அவரிடம் நடிக்கிறதுக்காக தானே பணம் கொடுத்திங்க தனிப்பட்டு கடன் கொடுக்கலேல அவர்தான் நடிச்சு தாரேன் சொல்றார்ல என பஞ்சாயத்து செய்து முடித்தாராம், இருப்பினும் இன்றுவரை கார்த்திக் நடித்தும் தரவில்லை, பணமும் தரவில்லை என்று இயக்குனர் பாரதிகண்ணன் கூறியுள்ளார்.
				
 