அபூர்வ சகோதரர்கள் உருவான கதை

அபூர்வ சகோதரர்கள் உருவான கதை

அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் கடந்த 1989ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படம். இந்த வெற்றி எளிதில் அவருக்கு கிட்டவில்லை.

1980களிலேயே இப்படி குள்ளமாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவிடம் சொன்னாராம் கமல்ஹாசன். அதன் தொடக்கமாக எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக ஒரு சின்ன டீசர் போல புன்னகை மன்னன் படத்தில் ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

படம் தொடங்கப்பட்டு சில காட்சிகள் பாலைவனத்தில் சர்க்கஸ் குழுவினர் நடந்து செல்வது போல் எல்லாம் முதலில் எடுக்கப்பட்டதாம். ஒரு குள்ளன் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்து அவர் கைவிட்டதால் பாலைவனத்தில் சோகமுடன் நடந்து செல்வது போல அமைக்கப்பட்டதான் ஆனால் அது எல்லாம் சரியாக இல்லாத காரணத்தால் சோர்வடைந்து படப்பிடிப்பு கைவிடப்பட்டிருக்கிறது.

 

பிறகு திரைக்கதையமைப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் சொல்லப்பட்ட, அவர்தான் இப்படிலாம் எடுக்காதிங்க, குள்ளனை ஹீரோவாக்குங்க படம் வெற்றிபெறும் என கமர்சியலாக அந்த படத்தை மாற்றி இருக்கிறார். கதை திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை செய்து இன்று அனைவரும் பார்க்கும் வகையிலான படைப்பாக உருவாக்கம் செய்திருக்கிறார்.முதலில் கமலின் அம்மாவாக நடித்தது காந்திமதி, ராஜா கைய வெச்சா பாடலுக்கு பதிலாக அம்மாவ நான் காலத்தொட்டு கும்பிடணும்டோய் பாட்டெல்லாம் போடப்பட்டு பின்பு மனோரமா மாற்றப்பட்டிருக்கிறார். இப்படியெல்லாம் ஆரம்பத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்து இறுதியில் ஒருவழியாக திரைக்கதை அமைக்கப்பட்டு படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.