---Advertisement---

ஒரே புகை மூட்டம் தான் உள்ளுக்குள்ள…தியேட்டருக்குள் இந்தியன் தாத்தாவை தேட வைத்த ரசிகர்கள்…

Published on: June 7, 2024
indian kamal
---Advertisement---

“இந்தியன் – 2” படம் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. படத்தின் ஆடியோ ரீலீஸ் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட விதம் கூட படத்தின் மீதான ஆவலை அதிகரிக்க வைத்துள்ளது.

‘தாத்தா வராரு’ பாடல் தான் இப்போது ‘ட்ரெண்ட்’. கமலின் முந்தைய படமான “விக்ரம்” வசூல் சாதனையை படைத்து கமலுக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது என்றும் சொல்ல வைத்தது.

இதனாலும் “இந்தியன் – 2″வின் மீதான மோகம் கூடியுள்ளது. இதன் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் தான் இரண்டாம் பாகத்தின் இயக்குனரும் கூட. கமல் இந்தியனுக்கு சாவே கிடையாது என பேசிய வசனத்தோடு தான் முதல் பாகம் முடிவடைந்தது.

இது தான் “இந்தியன் – 2”  முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என யூகிக்க வைக்கிறது ரசிகர்களை. ரிலீஸ் தேதியை நெருக்கிக்கொண்டிருக்கிறார் “இந்தியன் – 2” தாத்தா.

indian - 1
indian – 1

இப்படி பட்ட நேரத்தில் “இந்தியன்” முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. மேள,தாளம் முழங்க ஆடி கொண்டாடி இருக்கிறார்கள் கமலின் ரசிகர்கள்.

அது மட்டுமல்லாது “தீனா” பட ரீ-ரிலீஸின் போது அஜீத் ரசிகர்கள் செய்தது போல கமலின் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்திருக்கிறார்கள். புகையை அதிகமாக கக்கிய புஸ்வான வெடியை கொளுத்தி விட்டது இப்போது கண்டனத்திற்குரிய செயலாக பேசப்பட்டு வருகிறது.

அஜீத், விஜய் ரசிகர்களுக்கு நாங்கள் மாத்திரம் என்ன சலைத்தவர்களா என்ன?,  என ரீலீஸ் கொண்டாட்டத்தினை பார்த்தவதவர்களை சொல்ல வைக்கும் விதாமாக மாற்றி விட்டனராம் உலக நாயகன் ரசிகர்கள். “இந்தியன் – 2” ரிலீஸ் ஒரு பக்கமிருக்க “பாகுபலி” பிரபாஸுக்கு கமல் வில்லனாக நடித்திருக்கும் “கல்கி- 2898 AD” படம் வேற வெளியாகவுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!