---Advertisement---

பாவா லட்சுமணன் சொன்ன ஆனந்தம் பட சுவாரசியங்கள்

Published on: October 15, 2025
---Advertisement---

பாவா லட்சுமணன் ஆர் பி சவுத்ரி படங்களில்  மேனேஜராக பணியாற்றியவர்  ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் அதில் முக்கியமான திரைப்படம் ஆனந்தம் திரைப்படம்.இந்த திரைப்படத்தில் தான் இவர் முதன் முதலாக நடித்தார்.

 

ஆர் பி சவுத்ரி தயாரித்த படங்களின் அத்தனை வரலாறும் இவருக்கு அத்துபடி. இயக்குனர் லிங்குசாமியுடன் மம்முட்டிக்கு கதை சொல்வதற்காக கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அங்கே ஆனந்தம் பட கதையை கூறினாரா மம்முட்டி ஏதோ வித்தியாசமாக சோபாவில் அமர்ந்தபடி சாய்ந்து கொண்டு கதையை தெனாவட்டாக கேட்டார் என்று கூறி இருக்கிறார்.

 

ஆனாலும் கதை கேட்டவுடன் லிங்குசாமி,கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே என சொன்னாராம்.

 

அதன் பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து படப்பிடிப்பில் பங்கேற்ற மம்முட்டி, இந்த படத்தில் நடித்ததற்காக பணமே பெற்றுக் கொள்ளவில்லையாம். சவுத்ரி சார் படத்தின் கதை ரொம்ப நல்லா இருக்கு பணம் எனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்ற வகையில் கூறிவிட்டாராம் மம்முட்டி.

படத்தில் பாவா லட்சுமணன் கதாபாத்திரத்தில் முன்பு நடிக்க வேண்டியது வடிவேலு, சார்லி போன்றவர்களாம்.வடிவேலு 40 நாட்கள் என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். அதுபோல் சார்லி நடிக்கிறேன் எனக் கூறிவிட்டு விஜயின் நிலாவே வா படத்திற்கு சென்று விட்டாராம்.

படத்தில் மம்முட்டிக்கு யானை மாலை போடுவது போல் ஒரு காட்சி வரும் காட்சி முடிந்தவுடன் மம்மூட்டி கேட்டாராம் அடுத்த காட்சியில் அந்த ஓட்டை பிரித்து இறங்கும் திருடனாக நடிப்பதற்கு யார் நடிக்கிறார் வடிவேலா சார்லியா என கேட்டாராம்.

படக்குழுவினர் இவர் தான் நடிக்கிறார் என பாவா லட்சுமணனை காண்பித்தார்களாம். பாவா லட்சுமணனை பார்த்த மம்முட்டி யார் இவன் பன்னிக்குட்டி மாதிரி இருக்கிறான் என  விளையாட்டாக சொன்னாராம்.

 

மம்முட்டி ஒருமுறை தொழுகை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வர தாமதமாகிவிட்டதாம். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று யோசித்து பாவா லட்சுமணன் சம்பந்தமான அந்த அரிசி பருப்பு காமெடியை படமாக்கினார்களாம்.