---Advertisement---

சிறந்த டான்ஸரான ஆனந்த்பாபு – பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போன சோகம்

Published on: September 13, 2025
---Advertisement---

பொதுவாக  எல்லாம் தான் நன்றாக இருக்கும்போதே தன் மகனை செட்டில் செய்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சினிமா கலைஞர்கள், தன் மகனை வேறு துறைகளில் நுழைத்துவிட முயற்சித்து விட பார்த்து , அது முடியவில்லை எனில் எப்படியாவது தான் புகழ்பெற்ற சினிமாவிலேயே நுழைத்து விட முயற்சி செய்வார்கள், அப்படித்தான் தன் மகன் ஆனந்த்பாபுவுக்கு சினிமா ஆர்வம் இருப்பதை பார்த்து பல கலைகளை அவரை கற்றுக்கொள்ள செய்தார்.

அவற்றில் ஒன்றுதான் டான்ஸ், டான்ஸில் பட்டைய கிளப்புபவர் ஆனந்த்பாபு, ஆனால் நேற்று வந்த சாண்டி மாஸ்டரை கூட பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனந்த்பாபுவுக்கு பின்னால் வந்த பிரபுதேவா, சகோதரர்கள் கூட புகழ்பெற்று பெரிய லெஜெண்ட் ஆகிவிட்ட நிலையில்,  ஆனந்த்பாபு மிகப்பெரிய அசுரத்தனமான டான்ஸர் என  அந்த நாளைய சில ரசிகர்களை தவிர யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

 

டான்ஸ் ஆடுவதற்கென்றே ஹிந்தியில் பிரபலமான ஒரு படத்தை தமிழில் பாடும் வானம்பாடி என்ற பெயரில் நாகேஷ் தயாரித்தார், அதில் நானொரு டிஸ்கோ டான்ஸர் என்ற பாடலுக்கு பயங்கரமா ஆடிப்பாடினார், பின்பு சிகரம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன டான்ஸ் மொமென்ட்ஸ் செய்திருப்பார், உதயகீதம் படத்தில் இடம்பெற்ற என்னோடு பாட்டு பாடுங்கள் என்ற பாடலில் டான்ஸில் அதகளம் செய்திருப்பார், பெரிய டான்ஸராக வர வேண்டியவர், நடிகராக மாறி அதிலும் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போய் விட்டார்.