---Advertisement---

படம் பண்ணலாமா அழைப்பு விடுத்த அஜீத்!…ஷங்கர் தான் சரியா வருவார்!…தட்டி தூக்க தயாராகும் தல?…

Published on: June 6, 2024
ajith shankar
---Advertisement---

“விடாமுயற்சி”யை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணியே ஆகனும்னு முனைப்பு காட்டி வருகிறாராம் அஜீத்ன்னு ஒரு தகவல் பரவியது. “குட் பேட் அக்லி” படத்தின் ஷூட்டிங்கும் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறதாம்.

பைக் டூர் போவது, பிரியாணி செய்வது இதை எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு தள்ளி வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாம் ஏ.கே. விஜய் இடம் விரைவில் காலியாகும் என எதிர்பார்க்கபடும் நிலையில் தனது சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறாராம் அஜீத்.

ajith vinodh
ajith vinodh

தன்னை வைத்து இதற்கு முன்னர் வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அலைகிறாராம் அவர்.  விஜயின் கடைசி படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படத்தினை இயக்கப்போவது ஹெச்.வினோத் தான் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது.

அஜீத்தை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியவர்  தானே வினோத். மீண்டும் வினோத்துடன் சேர்ந்து படம் பண்ணலாம் என முடிவெடுத்து அவரை தொடர்பு கொண்டிருக்கிறாராம் அஜீத்.

விஜய் படத்தை எப்போது துவக்கி, எப்போது முடிப்பீர்கள் என கேட்ட தோடு நல்ல ஒரு சப்ஜெக்டை ரெடி பண்ணுங்க ஒன்னா டிராவல் பண்ணலாம்னு பச்சை கொடியை தூக்கி காட்டியிருக்கிறார் வினோத்திடம்.

இது ஒரு பக்கம் இருக்க “இந்தியன் – 2” படத்தை முடித்து விட்ட ஷங்கர், “கேம் சேஞ்சர்” படத்தில் தீவிரம் காட்டி வர, அதன் பிறகு “வேல்பாரி”யை துவக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்.

ஷங்கரும், அஜீத்தும் கடந்த வாரம் சந்தித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு வேளை அஜீத் “வேல் பாரி” யில் இணைவதற்காகவா? அல்லது இந்த படத்தை ஷங்கர் முடித்த பின்னர் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தையா? அது என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!