---Advertisement---

90களில் ஆணழகனாக விளங்கி மக்கள் மனம் கவர்ந்த கார்த்திக்.

Published on: September 21, 2025
---Advertisement---

90களில் கொஞ்சம் சார்மிங் ஆன அழகான நடிகர் என்றால் அது கார்த்திக் தான். 90களில் மற்ற முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் ஒரு 30 வயதை எட்டிய வயசு தான் இருக்கும். இருப்பினும் கொஞ்சம் வயது அதிகமான தோற்றத்தில் பல ஹீரோக்கள் தெரிந்தார்கள். ஆனால் 90களில் கார்த்திக் மட்டும் ரொம்ப இளமையாகவே தெரிந்தார்.

 

கார்த்திக் நடிகர் முத்துராமனின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக தனது உதவி இயக்குனர் படையுடன் பாரதிராஜா ஹீரோவை தேடி அலைந்து கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து பாரதிராஜாவே மயங்கி விட்டார் என்று தான் சொல்ல முடியும். பாண்டியனை வளையல் கடையில் தேடி பிடித்தது போல கார்த்திகை பேட்மிட்டன் விளையாடிய இடத்தில் பாரதிராஜா தேடிப் பிடித்து, அவரை ஹீரோவாக்கினார்.

 

அவர் முத்துராமனின் மகன் என்று தெரிந்தவுடன் பாரதிராஜாவுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமாகிற்று. முறைப்படி முத்துராமன் அவர்களிடம் அனுமதி கேட்டு தான் கார்த்திகை இவர் கதாநாயகன் ஆக்கினார்.

 

அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு பிறகு சின்ன சின்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் 90களில் வந்த பாண்டி நாட்டு தங்கம் வருஷம் 16 கிழக்கு வாசல் இதுபோல படங்களில் நடித்துதான் உச்சநிலையை அடைந்தார். அந்த நேரத்தில் தென் மாவட்டங்களில் எனக்கு கார்த்திக் போல மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு கூட பெண்கள் இருந்தார்கள் என்று இயக்குனர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.அந்த அளவுக்கு கார்த்திக்கிற்கு ரசிகைகள் அதிகம் உண்டு ரசிகர்களும் அதிகம் உண்டு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.