---Advertisement---

Lavanya Tripathi Shocking Interview: “நோ சொன்னதுக்கு கேஸ் போட்டாங்க.. ரூம்ல உட்கார்ந்து அழுதேன்!” – தமிழ் இயக்குனர் மீது லாவண்யா திரிபாட்டி பகீர் புகார்!

Published on: March 15, 2026
Actress Lavanya Tripathi reveals legal harassment and bad experience with a Tamil director during her early career.
---Advertisement---

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லாவண்யா திரிபாட்டி (Lavanya Tripathi). தமிழில் சசிகுமாருடன் ‘பிரம்மன்’, சந்தீப் கிஷன் உடன் ‘மாயவன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சமீபத்தில் தெலுங்கு நடிகர் வருண் தேஜை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது ‘சதி லீலாவதி’ (Sathi Leelavathi) என்ற படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான ஒரு நேர்காணலில் (Open House with Fans), தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு பயங்கரமான மற்றும் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அசௌகரியமான சூழல்: “நோ” சொன்ன லாவண்யா!

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை லாவண்யா இப்போது நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியிருந்த லாவண்யா திரிபாட்டிக்கு, அந்தப் படத்தின் இயக்குனரின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் ஏதோ தவறாகத் தோன்றியுள்ளது.

நேர்காணலில் இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு தமிழ் படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த இயக்குனரின் செயல்பாடு எனக்கு வசதியாக இல்லை. ஏதோ தவறு நடப்பதாக என் மனதுக்குத் தோன்றியது. உடனே அந்தப் படத்திலிருந்து விலகுவதாகக் கூறி, நடிக்க முடியாது என மறுத்துவிட்டேன்” என்றார்.

பழிவாங்கிய இயக்குனர்: தொடர்ந்த சட்ட சிக்கல்கள்!

லாவண்யா ‘நோ’ சொன்னதோடு அந்தப் பிரச்சனை முடிந்துவிடவில்லை. அதன் பிறகுதான் உண்மையான சித்திரவதை தொடங்கியுள்ளது. அந்த இயக்குனரும் தயாரிப்பு தரப்பும் இணைந்து லாவண்யா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பத்திரிகைகளில் லாவண்யாவைப் பற்றித் தவறான செய்திகளையும், அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான கட்டுரைகளையும் பரப்பியுள்ளனர்.

“சினிமா பின்னணி ஏதுமில்லாத ஒரு பெண்ணாக அந்த நேரத்தில் நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். எனக்கு ஆதரவாகப் பேச யாரும் இல்லை. அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் வீட்டுக்கு வந்து கதவை மூடிக்கொண்டு பலமுறை அழுதிருக்கிறேன். யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால் அந்த அழுத்தம் என்னை இன்னும் வலிமையாக்கியது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் லாவண்யா திரிபாட்டி.

மாற்றத்தை நோக்கி லாவண்யா!

இயக்குனரின் பெயரை வெளிப்படையாகச் சொல்லாத லாவண்யா திரிபாட்டி, இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்குத் தைரியமாக ‘நோ’ சொல்லுங்கள் என்ற ஆலோசனையையும் வழங்கினார்.

லாவண்யா திரிபாட்டி தற்போது தமிழில் அதர்வாவுடன் ‘தணல்’ (Thanal) மற்றும் சி.வி.குமார் இயக்கத்தில் ‘மாயா ஒன்’ (Maaya One) போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தத் துணிச்சலானப் பேட்டி, திரையுலகில் நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் மன ரீதியான அழுத்தங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official poster of movie Kara starring Dhanush announcing the pre-release event at Nehru Indoor Stadium Chennai.

KARA Event : “சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷ்” – மிரட்டலான ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் தேதியை அறிவித்தது கர படக்குழு!

Actor Arjun Das acting in a promotional video for Con City where he is searched by Election Flying Squad.

Arjun Das Con City : “பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்?” – வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் செம ப்ரோமோ!

Actor SJ Suryah in a candid interview explaining why he did not act in the movie Lubber Pandhu.

Lubber Pandhu Secret : “தினேஷ் ரோல்ல நான் நடிச்சிருக்கணும்” – லப்பர் பந்து கதையை எஸ்ஜே சூர்யா மறுக்க இதுதான் காரணமா?

Watermelon Star Diwakar submitting a petition at the Chennai Collector Office against Ma Ka Pa Anand and Pugazh.

CWC 7 Controversy : “கலெக்டர் ஆபீஸ் வரை போன திவாகர்” – மாகாபா, புகழ் மீது அதிரடி மனு; சிடபிள்யூசி செட்டில் நடந்தது என்ன?

Director Vignesh Shivan talking about Dhanush, Ajith Kumar, and the Jana Nayagan leak issue during LIK promotions.

Vignesh Shivan Interview: “Dhanush-உடன் என்ன பிரச்சனைன்னே தெரியல” – ஜன நாயகன் லீக் முதல் அஜித் வரை; விக்கி உடைத்த ரகசியங்கள்!

Actor Antony Varghese in a rugged look from the Malayalam trailer of Kattalan featuring 3 sound experiences.

Kattalan Trailer : “இந்திய சினிமாவிலேயே முதல்முறை” – 3 விதமான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸுடன் வெளியான காட்டாளன் ட்ரைலர்; மிரட்டும் பிஜிஎம்!