ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானாலும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளோ நல்ல சம்பளங்களோ வந்து குவிந்து விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறினார் ரஜினி.
அவரை திரையுலகத்தில் நன்கு நிலை நிறுத்தியது பாரதிராஜாவின் பரட்டை கதாபாத்திரம் அப்போதெல்லாம் ரஜினி நாயகன் அல்ல, எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தவர். பைரவி படத்துக்கு பின் தான் ரஜினியின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது
பரட்டை கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்ற முயற்சியில் பாரதிராஜா இருந்தபோது , ஒரு பட விழாவில் கலந்து கொள்ள பாலச்சந்தர் அவர்களுடன் பைக்கில் வந்து இறங்கி இருக்கிறார் ரஜினி. அவரை பார்த்ததும் நீளமான முடி பாரதிராஜாவுக்கு பிடித்துவிட்டதாம்,யோவ் என்னய்யா என் படத்துல நடிக்கிறியா நான் ஆர்ட் பிலிம் எடுக்கிறேன் என்றாராம், ஏனென்றால் பெரிய படம் என்றால் காசு கேட்டுவிடுவாரே என்று, ரஜினியோ சம்பளம் சம்பளம் எவ்வளவு என கேட்க, பாரதிராஜா முழிக்க 5000 சம்பளம் வேண்டும் என்றாராம், பாரதிராஜாவோ அதையும் குறைத்து 3000 தர்றேன் என சொல்லி , கடைசியில் அதையும் கொடுக்காமல் அதில் 500 ரூபாய் பாக்கி வைத்தேன், அதை இன்னமும் பார்த்தால் ரஜினி நகைச்சுவையாக கூறுவார் என சித்ரா லட்சுமணன் உடனான தனது அனுபவத்தில் பாரதிராஜா கூறி இருக்கிறார்.
